tamilnadu

பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு

பெண் குழந்தைகள் பாதுகாப்பு கருத்தரங்கு

சேலம், ஜூலை 17- சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கான மூன்று நாள் கருத்தரங்கம் சேலத்தில் வியாழனன்று துவங்கியது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவர் களுக்கெதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும் செயல் படுத்தப்படும் சட்டங்களான வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961, கருக்கலைத்தல் மற்றும் கருவிலிருக்கும் குழந்தை யின் பாலினமறிதல் தடைச்சட்டம் 1994 (PCPNDT Act 1994), குழந்தைத்திருமண தடைச்சட்டம் 2006, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்புச் சட்டம் 2007, பணியிடங்க ளில் பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் 2013 (Posh Act), குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005, போக்சோ சட்டம் 2012 ஆகியவை குறித்து துறைசார் வல்லுநர்கள் இக்கருத்த ரங்கில் விளக்க உள்ளனர். ஆட்சியர் ரா.பிருந்தாதேவி கருங் தரங்கை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில்  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழங்கறிஞர் ஆர். ராஜா,  மாவட்ட சமூக நல அலுவலர்கள் ரெ.கார்த்திகா (சேலம்), ராஜம்மாள் (விழுப்புரம்), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.