மும்பை, செப். 3- மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உரான் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் எரி வாயு ஆலை செயல்பட்டு வருகிறது. அதி காலையில் இந்த ஆலையின் மழைநீர் வடிகால் பகுதியில், திடீர் தீவிபத்து ஏற் பட்டது. உடனடியாக தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் நெருக்கடிகால மேலாண்மை பிரி வினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆலைக்கு வந்து கொண்டிருந்த எரிவாயு குஜராத் மாநிலத்திலுள்ள ஹசீரா ஆலைக்கு திருப்பிவிடப்பட்டது. இந்த தீ விபத்தில் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேரும், ஓ.என்.ஜி.சி நிறு வனத்தின் மூத்த அதிகாரி ஒருவரும் பலி யாகினர். மேலும் 2 பேர் பலத்த காயங் களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.