tamilnadu

புதுவையில் கோவில் பணியாளர்கள் சங்கம் உதயம்

புதுச்சேரி, ஜூன் 23- புதுச்சேரியில் கோவில் பணி யாளர்கள் சங்கம் உதயமானது. கோவில்களில் பணியாற்றும் பணி யாளர்களின் பேரவைக் கூட்டம்  விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதார மையத்தில் அர்ச்ச கர் நா.ஜீவானந்தம் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு  புதுச்சேரி பிரதேச தலைவர்  கே.முருகன், செயலாளர் ஜி.சீனிவாசன்  ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் தலைவராக அர்ச்சகர் நா.  ஜீவானந்தம், செயலாளராக எஸ்.பிரசன்னா, நிர்வாகிகளாக அருள்ராஜ், சுந்தரமூர்த்தி. செல்வம் உள்ளிட்ட கமிட்டி உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கோவில் பணியாளர்களுக்கான இச்சங்  கத்தை பதிவு செய்வது, சிஐடியு சங்கத்தோடு  இணைத்து செயல்படுவது, கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்துள்ள பணி யாளர்களுக்கு ரூ.7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.