tamilnadu

விதிமுறை மீறிய கிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்: முதல்வர்

புதுச்சேரி,ஜன.27- புதுச்சேரி குடியரசு தினத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  விதிமுறையை மீறி யுள்ளார் என்று முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டப் பேரவையில் செய்தியாளர் களை சந்தித்த முதலமைச்சர் நாராயண சாமி,“குடியரசு தினத்தையொட்டி துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேனீர் விருந்துக்கு நானும், அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர் சென்றிருந்தோம். அப்போது எங்களை அமரவைத்துவிட்டு, திடீ ரென்று பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்ட புதுச்  சேரியினை சேர்ந்த கலைஞர்களை  பாராட்டு வார் என்று அறிவிக்கப்பட்டது” என்றார். புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு பத்ம  விருதுகள் கிடைத்திருப்பது பாராட்டுகுரி யது. அவர்களுக்கு தனியாக பாராட்டு விழா  நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும். அதனை விடுத்து திடிரென்று குடியரசு தின  தேனீர் விருந்தில் பாராட்டு விழா நடத்துவதும்,  அது குறித்து என்னிடமோ அல்லது அமைச்சர்  களிடமோ தெரிவிக்காமல் திடீரென்று என்னை அழைத்து கலைஞர்களை கவுர விக்கச் சொல்வது விதிமுறை மீறிய செயல்  என்றும் அவர் கூறினார். ஆளுநர் என்பவர் தனிப்பட்ட நபர் அல்ல.  அவர் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்  றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சர் கள் ஆகியோருக்கு முன்கூட்டியே தெரி விக்க வேண்டும்.  இப்படித்தான் கடந்த மூன்  றரை ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி துணை ஆளுநர் செயல்பட்டு வருகிறார் என்றும் தெரிவித்தார். குடியரசு தினத்தின் போது நடைபெற்ற காவலர், மாணவர்கள் பங்கேற்ற  அணி வகுப்பின் போது அவர்களுக்கு கையை தூக்கி வணக்கம் கூட செலுத்தாமல்  செல்  பேசியை பார்த்துக் கொண்டிருந்த அனை வரையும் அவமதிக்கும் செயல் என்றும் அவர்  புதுச்சேரி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

;