புதுச்சேரி, மார்ச் 5- இலவச அரிசி திட்டத்தின்படி அரிசியே வழங்கக் கோரி இடதுசாரிகள் உட்பட அனைத்து கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரேசன் திட்டத்திற்கு தேவையான நெல்லை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, பணத்திற்கு பதில் அனைவருக்கும் இலவச அரிசியை வழங்க வேண்டும். பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேஷ னில் வழங்க வேண்டும் என்பன கோரிக்கை கள் வலியுறுத்தி இப்போராட்டம் நடை பெற்றது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அலுவல கம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், நிர்வாகக்குழு உறுப்பினர் நாரா. கலைநாதன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் சுதாசுந்தரராமன், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செய லாளர் தேவ.பொழிலன், திமுக தொகுதிச் செயலாளர் நடராஜன், சிபிஐ எம்எல் கட்சி யின் மாநில நிர்வாகி பழனி, திராவிடர் கழக மாநிலத் தலைவர் சிவ.வீரமணி ஆகியோர் உரையாற்றினர்.