tamilnadu

img

ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விஆர்எஸ் திட்டத்தின்படி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு டிசம்பர், ஜனவரி மாத  ஊதியம், ஓய்வு காலப் பலன்கள் எதுவும் வழங்காமல் இழுத்தடிக்கும் பிஎஸ்என்எல் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கொளஞ்சியப்பன், சுப்பிரமணியன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன்,பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான ஓய்வூதியர்கள் பங்கேற்று பிஎஸ்என்எல் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கமிட்டனர்.