tamilnadu

பஞ்சாலைகளை மூடும் ஆளுநருக்கு சிஐடியு கண்டனம்

புதுச்சேரி,ஜன.25-  ஏ.எப்.டி பஞ்சாலையை மூடும் முடிவை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று சிஐடியு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள் ளது. சிஐடியு புதுச்சேரி மில் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஜெ. குணசேகரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,“புதுச்சேரி பிரதேசம் விடுதலை பெற்ற நேரத்தில் பொரு ளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகித்து, தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு களை அளித்தது ஏ.எப்.டி.,சுதேசி,பாரதி ஆகிய மூன்று பஞ்சாலைகளுமே” என்று கூறியுள்ளார். புதிய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் அளவிற்கு பெரிய தொழில்கள்  இன்று வரை புதுச்சேரியில் அமையவில்லை. மேட்டுப்பாளையம், திருபுவனை ஆகிய தொழில்பேட்டைகளில் செயல்பட்டு வந்த சிறுகுறு தொழில்களும் காணாமல் போய்க் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய-மாநில அரசுகளின் தவறான தொழிற்கொள்கைகளாலும் நிர்வாக திறமை யற்ற அதிகாரிகளாலும் பஞ்சாலைகள் நலிவடைந்தது. அதில் ஒன்றுதான் ஏ.எப் டி.மில். இந்த ஆலையின் நலிவுக்கு ஒரு போதும் தொழிலாளர்கள் காரணம் அல்ல.  புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்ப நவீன எந்திரங்கள் இல்லை என்பதும் ஆலை நட்டத்திற்கு மற்றொரு காரணமாகும்.  ஆலையின் நட்டத்தை காரணம் காட்டி கடந்த 2013 ஆம் ஆண்டில், ஆலை லே ஆப் விடப்பட்டது. அதை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் தொடர்ச்சியாக நடத்திய போராட்டத்தால்  சென்னா ரெட்டி தலைமையில் ஒரு ஆய்வு அறிக்கையும், அதை அடிப்படையாகக் கொண்டு என்.டி.சி  (தேசிய பஞ்சாலைக் கழகம்) ஆய்வு செய்து ஒரு அறிக்கையும் சேர்த்து, இந்த இரண்டு அறிக்கைகளை கொண்டு புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையை தயார் செய்து அனுப்பியது. தற்போது புதுச்சேரி அரசின் முதலமைச்சராக உள்ள நாராயணசாமிதான் அன்றைக்கு மத்திய அரசு பொறுப்பில் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராக இருந்தார். மத்திய ஜவுளித் துறையில் நிதி உதவி பெற்று ஏ.எப்.டி ஆலையை புணரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதையும் அறிவோம். அவ்வாறு முயற்சிகள் எடுத்த இன்றைய முதலமைச்சர், ஏ.எப்.டி ஆலையை புதுச்சேரி யின் தொழிலாளர் வர்க்க விடுதலையின் அடையாளமாக புணரமைத்து ஆலையை நவீனப்படுத்தி, அதில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி புதுச்சேரி தொழிலாளர்களுக்கும், இளைஞர்களுக்கும் புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.  புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசின் அமைச்சரவை முடிவை மீறி, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  ஒரு சில அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு ஏ.எப்.டி மில்லை  ஏப்ரல் 30 முதல் நிரந்தரமாக மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆளுநர் கிரண் பேடியின் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென சிஐடியு சங்கம் கேட்டுக் கொள்கிறது. புதுச்சேரி மக்களுக்கும், தொழிலாளர்க ளுக்கும் துரோகம் இழைத்து, ஆலையை மூட வேண்டும் என்ற சர்வாதிகார போக்கில் முடிவெடுத்த, புதுச்சேரி துணை நிலை  ஆளுநர் கிரண் பேடியை  வீழ்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

;