tamilnadu

img

சி.ஐ.டி.யு. கொடியேற்று விழா

புதுச்சேரி சேதராப்பட்டில் உள்ள மைலம் இந்தியா பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தில் பணி புரியும் 78 தொழிலாளர்கள் சார்பில் சி.ஐ.டி.யு. கொடியேற்று விழா, பெயர் பலகை திறப்பு விழா செயலாளர் தாமோதரன் தலைமையில் ஞாயிறன்று (ஜூலை 19) நடைபெற்றது. சிஐடியு பிரதேச தலைவர் முருகன் பெயர் பலகையை திறந்து வைத்தார். செயலாளர் சீனிவாசன், பொருளாளர் பிரபுராஜ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சங்கத்தின் நிர்வாகிகள் ராஜ்குமார், பச்சைமுத்து, சரவணன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;