ஹூண்டாயின் சொகுசு வாகனப் பிரிவுகளில் என்விடியா டிரைவை ஜி.வி 8 மற்றும் ஜி80 மாடல்களில் பயன்படுத்துவதாக என்விடியா கூறியுள்ளது.
என்விடியா நிறுவனம் கணினி தொழில்நுட்பத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் கணினி விளையாட்டுகள், அதன் திறனை அளவை அதிகரிக்க புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறார்கள். ஆனால், அந்த நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய தொழில்நுட்பங்களை நிறுவி முன்னிலையில் இருந்து வருகிறது என்விடியா. இந்த நிலையில் ஹூண்டாயுடன் சொகுசு வாகனப்பிரிவுகளில் என்விடியா டிரைவை ஜி.வி.80, ஜி 80 ஆகிய மாடல்களில் பயன்படுத்துகிறது. இதன் மூலம் பொழுதுபோக்கு முறையை பயன்படுத்தும் சிப் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டில் ஹூண்டாய் மோட்டார் குழுமம் 7 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை தயாரித்துள்ளது. இதன் துணை நிறுவனமான கியா மோட்டார்ஸ் இதனுடன் இணைந்துள்ளது. டிரைவ் வன்பொருள் மற்றும் மென்பொருள் கூறுகளை உருவாக்கி பயனாளரின் அனுபவத்தை மேம்படுத்தவும், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய மென்பொருளை நிரந்தரமாக புதுப்பிக்க முடிவும்.
என்விடியா மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி ஏஜி மற்றும் ஹோண்டா மோட்டார் ஆகியவற்றுடன் இன்-கார் பொழுதுபோக்கு மற்றும் தகவல் அமைப்புகளிலும் செயல்பட்டு வருவதாக என்விடியா அதிகாரிகள் கூறியுள்ளனர்.