tamilnadu

img

புதுச்சேரி – 1 முதல் 9 வகுப்புகளுக்கு நாளை முதல் விடுமுறை  

புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்புகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.    

புதுச்சேரியில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமிக்ரான் தொற்று காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்பு தொடர்ந்து நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். அதனைதொடர்ந்து மறுஅறிவிப்பு வரும்வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.