tamilnadu

img

மாணவர்  சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம்

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பல்கலைக் கழக நிர்வாகத்தின் அடாவடியை கண்டித்தும் இந்தி மாணவர்  சங்கத்தின் சார்பில் புதுச்சேரி காமராஜர் சிலை எதிரில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ்,செம்மலர் உட்பட திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.