tamilnadu

புதுச்சேரியில் 970 வாக்குசாவடிகள்

புதுச்சேரி, ஏப். 17- புதுச்சேரி பிரதேசத்தில் மொத்தம் 970 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி காந்தவேலு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதவாது:-புதுச்சேரியில் 9 லட்சத்து 73 ஆயிரத்து 410 வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரி மக்களவை தேர்தலில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி,காரைக்கால்,மாஹே, ஏனாம் உள்ளடக்கிய பகுதிகளில் மொத்தம் 970 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 222 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அத்தொகுதியில் மட்டும் தலா ஒவ்வொரு வாக்குசாவடிகளிலும் இரண்டு வாக்களிக்கும் அறைகள் அமைக்கப் பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும். மாற்றுத் திறனாளிகள் வயதானவர்கள் என அனைவரும் வாக்குபதிவு செய்ய அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அள்ளது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை மாற்று ஆவணமாக எடுத்து கொள்ளப்படும். வாக்காளர்கள் கைப்பேசி எடுத்து செல்லக்கூடாது. அதேபோல் வாக்கு பதிவு மையங்களுக்கு 200 நூறு மீட்டர் தொலைவில் தான் வாகனம் நிறுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.

;