tamilnadu

img

சாலையில் தேங்கிய கழிவுநீர்: பெண்கள் நூதனப் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 6-புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடைத் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு புல்பண்ணைக்கு கொண்டு செல்லப் பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. இந்நிலையில், பாதாள சாக்கடைத்திட்டம் முறையாக செயல்படுத்தப் படாததால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாக்கடையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதன் ஒருபகுதியாக 40-ஆவதுவார்டுக்கு உட்பட்ட வாட்டாபட்டியில் பாதாள சாக்கடை வழியில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கடந்த சில மாதங்களாக சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள வசிப்பவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது.இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை எனக்கூறப்படுகிறது. இதனால், கொதித்துப் போன அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கழிவு நீர் வெளியேறுவதை தடுக்காத நகராட்சியைக் கண்டித்து சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.

;