tamilnadu

img

பல்கலைக்கழக நீச்சல் போட்டி

 புதுக்கோட்டை, ஆக.13- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி களுக்கு இடையே பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நீச்சல் போட்டி புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாமன்னர் கல்லூரி சார்பாக மாவட்ட நீச்சல் குளத்தில் நடைபெற்ற போட்டியில் கரூர், பெரம்பலூர், அரி யலூர், நாகபட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதி நீச்சல் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள். விழா விற்கு கல்லூரி முதல்வர் ஜெ.சுகந்தி தலைமை வகித்தார். பாரதிதாசன் பல்கலைகழக விளையாட்டுக்குழு செயலா ளர் அ.பழனிச்சாமி, ஆண்கள் போட்டி ஒருங்கிணைப்பா ளர் ஸ்ரீதரன் தங்கத்துரை, பெண்கள் போட்டி ஒருங்கி ணைப்பாளார் சி.மாலதி, மாவட்ட நீச்சல் சங்கத் தலைவர் முருகப்பன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.