tamilnadu

img

நபார்டு வங்கி சார்பில் சுயஉதவிக் குழுவினருக்கான பயிற்சி முகாம்

புதுக்கோட்டை: தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நடத்திய சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான திறன் வளர்ச்சி பயிற்சி முகாம் புதுக்கோட்டை அறிவியல் இயக்க பயிற்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  பயிற்சிக்கு முன்னோடி வங்கி மேலாளர் சு.ரமேஷ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், வங்கிகள், சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள் வழங்க தயாராக உள்ளது. கடன் பெறுபவர்கள் தொழில் செய்து அதன்மூலம் வருமானத்தை ஈட்டி தனது பொருளாதர நிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாள் எஸ்.ஜெயஸ்ரீ பேசுகையில், சுய உதவிக்குழுவினர் பெறும் கடன்களை முறையாக திரும்ப செலுத்தினால் வங்கியாளரே தேடி வந்து கடன் வழங்குவர். குழுவினர். சேமிக்கும்  பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.  இந்திய மருத்துவக் கழகத் தலைவர் மருத்துவர் கே.எச்.சலீம் கொரோனா வைரஸ் பரவும் விதம் பற்றியும் அதை தடுக்கும் முறை குறித்தும், கானொளி காட்சி மூலமாகவும், துண்டு பிரசுரம் மூலமாகவும் விளக்கி பேசினார். சுய உதவிக்குழுப் பயிற்சியாளர் டி.விமலா, ரோஸ் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் அகிலா, ஜீவிஎன் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் எஸ்.தனபாக்கியம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.ராஜ்குமார், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் லெ.பிரபாகரன், அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் அ.மணவாளன் ரோஸ் டிரஸ்டின் இயக்குனர் ஆதப்பன் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வளர்ச்சி ஆய்வு மையத்தின் நிர்வாக குழு உறுப்பினர் ம.வீரமுத்து வரவேற்க, க.ஜெயபாலன் நன்றி கூறினார்.

;