புதுக்கோட்டை, ஜூன் 8- புதுக்கோட்டையில் திங்கள்கிழமையன்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் ரேசன் அட்டை இல்லாத ஏழைகளுக்கு தமிழ்நாடு அரசு அனைத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு. முத்தையா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளர்(பொ) ம.வெள்ளைச்சாமி மற்றும் நிர்வாகிகள் இரா.இராஜேந் திரசிங், என்.இராமச்சந்திரன், கே.சதாசிவம், அ.மணவா ளன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜ்குமார், தமிழ்நாடு அறிவி யல் இயக்க நிர்வாகிகள் எல். பிரபாகரன், எம்.முத்துக் குமார், எம்.வீரமுத்து, ஆட்டோ ஓட்டுனர் சங்க மாவட்ட நிர்வாகி சி.அடைக் கலசாமி பங்கேற்றனர். புதுக்கோட்டை நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள், ரேசன் அட்டை இல்லாத ஏழை மக்கள் என 22 நபர்க ளைக் கண்டறிந்து அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டன. மாவட்டப் பொருளாளர் இரா. முருகேசன் நன்றி கூறினார்.