tamilnadu

img

விவசாயத்தைப் பாதுகாத்திடு! வேலை வாய்ப்பை பெருக்கு! மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடுக! சிபிஎம் எழுச்சி நடைபயணப் பிரச்சாரம்

புதுக்கோட்டை, நவ.24- விவசாயத்தைப் பாதுக்காக்க வும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பு களை உருவாக்கவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குன்றாண்டார்கேரிவல் ஒன்றியத்தின் மூன்று முனைகளில் இருந்து நடைபயணப் பிரச்சார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை எழுச்சியுடன் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட மக்களின் நீண்ட நாளையக் கோரி க்கையான காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை விரைந்து அமுல்படுத்த வேண்டும். கூட்டு றவு மற்றும் தேசிய வங்கிகளில் விவ சாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் ரத்துசெய்ய வேண் டும். வட்டியில்லாமல் புதிய கடன் வழங்க வேண்டும். ஏரி, குளங்களை ஆழப்படுத்தி வரத்துவாரி களுக்கான ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராசாப்பட்டி, தெம்மாவூர் உள் ளிட்ட பல்வேறு கிராமங்களில் குடி நீரில் அதிக அளவு உப்புத்தன்மை இருப்பதால் பலருக்கு சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிலர் மரணமடைந் துள்ளனர். எனவே, அனைத்துப் பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். பல வகையான புறம்போக்கு நிலங்க ளில் குடியிருந்து வரும் ஏழை களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு கட்டித் தர வேண்டும். குன்றாண்டார்கோவில் ஒன்றி யத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைப் பயன்படுத்தி இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலை அமைக்க வேண் டும். குன்றாண்டார்கோவில் ஒன்றி யத்தில் அரசு கலைக் கல்லூரி அமை க்க வேண்டும். நூறு நாள் வேலைத் திட்டத்தை 200 நாட்களாகவும், கூலியை ரூ.400 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும்.  சுய உதவிக்குழுப் பெண்களு க்கு தேசிய வங்கிகள் மூலம் தொழில் தொடங்க கடனுதவி வழங்க வேண்டும். கீரனூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கேரிக்கைகளை வலி யுறுத்தி இந்த நடைபயணப் பிரச் சார இயக்கம் நடைபெற்றது. ராமுடையான்பட்டியில் தொட ங்கிய நடைபயண பிரச்சாரத்திற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் தலைமை வகித்தார். திமுக பிரமுகர் ஆரோ க்கியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.பொன்னுச்சாமி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.பீமராஜ் மற்றும் எம். ரெங்கராஜ், கே.பழனிவேல் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரச்சா ரம் மின்னாத்தூர், பாப்புடையான் பட்டி, பழையூர், தெம்மாவூர், நால் ரோடு, குன்றாண்டார்கோவில், ஒடு கம்பட்டி வழியாக கீரனூரை வந்த டைந்தது. அண்டக்குளத்திலிருந்து தொடங்கிய நடைபயணத்திற்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமை வகித் தார். முன்னாள் ஊராட்சி ஒன்றி யப் பெருந்தலைவர் ரெங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத் தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ஸ்ரீதர், விதொச மாவட்டத் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் எம்.சண் முகம், புதுக்கோட்டை அரசுப் போக்கு வரத்து சங்க சிஐடியு பொதுச் செய லாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் ஜி.கோபால்சாமி, கலைச் செல்வன் உள்ளிட்ட பலர் பங் கேற்றனர். பெரம்பூர், கோவில்வீரக் குடி, திருப்பூர், வழமங்கலம் வழி யாக கீரனூரை வந்தடைந்தது. கிள்ளுக்கோட்டையிலிருந்து தொடங்கிய நடைபயணத்திற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் தலைமை வகித்தார். மூத்த தோழர் கோதண்டராமன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலாளர் கே.தங்க வேல், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் துரை.நாராயணன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.பாண்டிச்செல்வி, தலைவர் சாந்தா மற்றும் பெரியராஜ், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேறனர். மலை யடிப்பட்டி, அபிராமிபுரம், புலியூர் வழியாக கீரனூரை வந்தடைந்து.  மூன்று பிரச்சாரக் குழுக்களும் மாலை 5 மணியளவில் கீரனூரை வந்தடைந்தது. பேரணி நிறை வாக கீரனூர் வடக்குரத வீதியில் ஒன்றியச் செயலாளர் கே.தங்க வேல் தலைமையில்; கோரிக்ககை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் உரையாற்றினர்.