பொன்னமராவதி, ஜன.31- பொன்னமராவதி அருகே உள்ள வார்பட்டு வில் அறி வொளி மற்றும் அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் ஏ.சின்னழகன் கால மானார். 1992-ல் நடைபெற்ற முழு எழுத்தறிவு மற்றும் விழிப்பு ணர்வு இயக்கத்தில் உதவி ஒருங்கிணைப்பாளராக வார் பட்டு, திருக்களம்பூர், பொன் னமராவதி பகுதிகளில் தன்னை முழுநேரம் அர்ப்ப ணித்துக் கொண்டவர். திருக் களம்பூர், வார்பட்டு ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தினை ஆரம் பித்து மக்களிடம் அறிவியல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். தோழர் ஏ.சின்னழகனின் உடலுக்கு தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் மண வாளன், மாவட்டத் தலைவர் சதாசிவம், மாவட்ட துணைத் தலைவர் வீரமுத்து, ராஜ் குமார் உள்ளிட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி கள் அஞ்சலி செலுத்தினர்.