புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் சேந்தன்குடியைச் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் ப.விமல்துரை-எம்.சுசி ஆகியோரின் திருமணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையேற்று வியாழக்கிழமையன்று நடத்தி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.