tamilnadu

புதுக்கோட்டை மாவட்டத்தில் 27 ஊராட்சித் தலைவர் பதவிக்கு சிபிஎம் போட்டி

அறந்தாங்கி, டிச.15- உள்ளாட்சித் தேர்தலில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் சிபிஎம் தேர்தல் உடன்பாடு ஏற்பட் டது. திமுக வடக்கு மாவட்டச் செய லாளர் கே.கே.செல்லபாண்டியன், தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ். ரகுபதி ஆகியோர் முன்னிலையில் சிபிஎம் போட்டியிடும் தொகுதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் சிபிஎம் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், ஏ. ராமையன், எம். உடையப்பன், ஏ. ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், கே. சண்முகம், எஸ்.பொன்னுச்சாமி, துரைச் சந்திரன் ஆகியோர் பங்கேற் றனர். மாவட்ட ஊராட்சி குழு உறுப் பினர் கறம்பக்குடி 5வது வார்டு மற்றும் அறந்தாங்கி ஊராட்சி ஒன் றிய குழு உறுப்பினர் மேற்பனைக் காடு வார்டு 5 ம், திருவரங்குளம் ஒன்றிய குழு உறுப்பினர் கொத்த கோட்டை வார்டு 15ம், குன்றன்டார் கோவில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கிள்ளுக்கோட்டை  வார்டு 3 ஆகிய இடங்களில் போட்டி யிட ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும் சிபிஎம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் முழு வதும் 27 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதில் கறம்பக்குடி வடக்கு ஒன்றி யத்தில் 6 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்தில் 3 ஊராட்சி மன்ற தலை வர் பதவிக்கும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 5 ஊராட்சி மன்ற தலை வர் பதவிக்கும், திருவரங்குளம் ஒன் றியத்தில் 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், குன்றன்டார்கோவில் ஒன்றியத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், அன்னவாசல் ஒன்றியத்தில் 1, மனமேல்குடி ஒன்றி யத்தில் 1, பொன்னமராவதி ஒன்றி யத்தில் 3 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 2 ஊராட்சி மன்ற தலை வர் பதவிக்கும், விராலிமலை ஒன்றி யத்தில் 1 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் போட்டியிடும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பா ளர்களை வெற்றி பெற செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அய ராது பனியாற்றும் என்று சிபிம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் அறிவித்திருக்கிறார்.

;