tamilnadu

ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி,மே 11- புதுக்கோட்டை பொன்ன மராவதியில் ஏஐடியுசி தொ ழிற்சங்கம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை அடிப்படை யில் நிவாரணமாக தலா ரூ. 5,000 வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எல்.ராசு தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் ப.செல்வம், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.பிரதாப்சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.பி.நாக லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.