tamilnadu

கொரோனா... மருத்துவர் பலி

புதுக்கோட்டை:
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் எஸ்.முஜிபூர் ரகுமான்(47). இவருக்கு சிறுநீரகக் கோளாறு இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர்.

இதுகுறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கப் பொதுச் செயலர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கை: ரஷ்யாவில் இளநிலை மருத்துவப் படிப்பும், பிறகு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எலும்பு அறுவைச் சிகிச்சையில் பட்டயப் படிப்பும் முடித்தவர். நீட் தேர்வு, இடஒதுக்கீடு, சுற்றுச்சூழல், மருத்துவப் பிரச்னைகளில் தொடர் கருத்தரங்குகளை நடத்தி வந்தவர். தற்போது கொரோனாவுடன் போராடி உயிரிழந்துள்ள இவரதுகுடும்பத்துக்கு மாநில அரசு ரூ. 50 லட்ச
மும், மத்திய அரசு ரூ. 50 லட்சமும் வழங்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.