அறந்தங்கி, நவ.24- புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் பொன்னகரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அறந்தாங்கி திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பால் 100 புத்த கங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. திசைகள் நூலக புத்தக அன்பளிப்புத் திட்டம் 6வது நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமை வகித்தார். மண மேல்குடி வட்டார வள மேற்பார்வையாளர் தனலெட்சுமி அறந்தாங்கி வட்டார வள மேற்பார்வையாளர் சிவயோகம் முன்னிலை வகித்தனர். திட்ட இயக்குநர் முபாரக் அலி வரவேற்புரையாற்றினார். திட்டத்தை விளக்கி யாஸ்மின்ராணி பேசினார் திசைகள் அமைப்பின் தலைவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி அறி முக உரைஆற்றினார். விழாவில் ஈரோட்டைச் சேர்ந்த சமூக சேவகர் மனீஷாவுக்கு ‘அன்னை தெரசா’ விருது திசை கள் அமைப்பால் வழங்கப்பட்டது. திசைகள் அமைப்பின் பொருளாளர் முகமது முபாரக். நன்றி கூறினார்.