அறந்தாங்கி, அக்.20- புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டா ணிபுரசக்குடி ஊராட்சி, கோபாலபட்டினம் மக்கள் மேடை கல்வி அறக்கட்டளை சார்பாக கோபாலபட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அவசர மருத்துவ சிகிச்சை பெற இலவச அவசர கால ஊர்தி (ஆம்புலன்ஸ்) அர்ப்பணிப்பு விழா சனிக்கிழமை மாலை கோபாலபட்டினம் ஜிபிஎம் மக்கள் மேடை குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மேடை தலைவர் எம்.பாவா மரைக்காயர் தலைமை வகித்தார். மக்கள் மேடை உறுப்பினர்கள் கோபாலபட்டினம் ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் மக்கள் மேடை ஆலோசனைக்குழு உறுப்பினருமான எம்.முகமது மீராசா வரவேற்று பேசினார். இல வச ஆம்புலன்ஸ் அவசர கால ஊர்தியை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.நவாஸ்கனி, மக்கள் மேடை ஆலோசனைக்குழு உறுப்பினர் முகமது இப்ராஹிம் மற்றும் திரளான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர். நிறைவாக மக்கள் மேடை ஆலோசனைக்குழு உறுப்பினர் எம். முகமது யூசுப் நன்றி கூறினார்.