tamilnadu

img

புதுக்கோட்டை கண்காட்சியில்  97 அறிவியல் படைப்புகள்

புதுக்கோட்டை, அக்.17- புதுக்கோட்டை மாவட்ட அளவிலான அறிவியல் கண் காட்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 97 அறிவியல் படைப்புகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை திருஇருதய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  கண்காட்சியைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி பேசுகையில்,  இக்கண்காட்சியில் கணிதம், நகரும் பொருட்கள், உணவு, புதிய கண்டு பிடிப்பு முயற்சிகள் உள்ளிட்ட எட்டு தலைப்புகளில் மாண வர்களின் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளதுடன் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய கல்வி மாவட்டங்களை சேர்ந்த 28 பள்ளிக ளின் 84 படைப்புகளும், 13 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த 13 படைப்புகளும் என மொத்தம் 97 அறிவியல் படைப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  மேலும் 8 தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பு களிலிருந்தும் முதல் மூன்று நபர்கள் தேர்வு செய்யப்பட்டு காசோலை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. எனவே பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதுபோன்ற அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொண்டு தங்களது புதிய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி அறிவுத் த்திறனை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.