tamilnadu

108 ஆம்புலன்ஸ் ஊர்திக்கு மருத்துவ உதவியாளர் பணி தேர்வு

புதுக்கோட்டை, பிப்.11- 108 ஆம்புலன்ஸ் ஊர்திக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளது, 108 ஆம்புலன்ஸ் அவசர கால உதவி யாளர் மற்றும் ஓட்டுநர் பணி இடங்களுக் கான நேர்முகத்தேர்வு 15.02.2020 (சனிக் கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பழைய கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு பெற்றவர்கள் தமி ழகத்தில் எந்தப் பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள் 12 மணி நேரம் இரவு பகல் என சுழற்சிமுறையில் பணியாற்ற வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப் படும்.  மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்.சி. நர்சிங் விலங்கியல், தாவரவியல், மைக்ரோ பயாலஜி அல்லது ஜி.என்.எம் படித்திருக்க வேண்டும் அல்லது ஏ.என்.எம். அல்லது டி.என்.ஏ, டி.எம்.எல்.டி 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் அல்லது டி.பார்ம் 3 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் 19 வயதுக்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.  மருத்துவ உதவி பயிற்சியாளர்களுக்கு இ.எம்.டி டெக்னீசியன்; மற்றும் டெக்னீ சியன் பயிற்சிக்குமான தகுதிகள் ஓராண்டு சான்றிதழ் படிப்பை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்திருக்க வேண்டும். 19 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கு எழுத்து தேர்வு மருத்துவ நேர்முகம் உடற்கூறியல், முதலு தவி பணி தொடர்பாகவும்; மற்றும் மனித வள துறையின் நேர்முக தேர்வுகளும் நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படு பவர்களுக்கு 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி மருத்துவமனை ஆம்புலன்ஸ் சார்ந்த நடை முறை பயிற்சிகள் அளிக்கப்படும் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கலந்து கொள்ள லாம். மருத்துவ உதவியாளர் சம்பளம் ரூ.13,760 ஆகும். ஓட்டுநர் பணிக்கு ஆண்கள் விண்ணப் பிக்கலாம். 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டும். நேர்முகத்தேர்வன்று 24 வயதிற்கு மேலும் 35 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 1 ஆண்டு முடிந்திருக்க வேண்டும். ஆம்பு லன்ஸ் ஓட்டுநர் சம்பளம் ரூ.13,265 ஆகும். மேலும் விபரங்களுக்கு 7397724714, 7397724844, 7397444156 என்ற கைபேசி எண்ணிலும், 044-28888060, 28888075, 28888077 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.