tamilnadu

img

நாட்டிற்கு புதிய அரசியல் சட்டமா? எங்களுக்கு சம்பந்தம் இல்லை... ஆர்எஸ்எஸ் அமைப்பு அலறல்

நாக்பூர்:
‘புதிய அரசியலமைப்புச் சட்டம்’ என்ற பெயரில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உருவப்படத்துடன், சமூகவலைத்தளங் களில் வெளியான 15 பக்க ஆவணங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.இதனை ஆர்எஸ்எஸ் அமைப்புஅதிகாரப்பூர்வமாக வெளியிடாவிட்டாலும், இந்த ஆவணத்தில் ஆட்சேபத்திற்கு உரிய அம்சங்கள் இருந்ததால், பலரும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல என்று கூறுவார்கள். அதன்படி, ஆர்எஸ்எஸ் அமைப்புதான் அநாமதேயமாக இந்த ஆவணங்களை வெளியிட்டு, எதிர்வினைஎப்படியிருக்கிறது? என்பதைசோதித்து அறிய முயன்றிருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.இந்நிலையில், மோகன் பகவத் தின் படத்துடன் வெளியான ஆவணங்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ஸ்ரீதர் காட்கே கூறியுள்ளார். “புதிய அரசியலமைப்புச் சட்டம் என்ற பெயரில் தலைவர் மோகன் பாகவத் உருவப்படத்துடன் 15 பக்கஆவணங்கள் (பிடிஎப் வடிவில்) சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதுபோன்ற ஆவணங்கள் எதையும், ஆர்எஸ்எஸ் அமைப்பு வடிவமைக்கவும் இல்லை, வெளியிடவும் இல்லை.ஆர்எஸ்எஸ் அமைப்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சியில் இதுபோல் சிலர்செய்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஆர்எஸ்எஸ்முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்டம்குறித்து எந்த விதமான முன்மொழிவையும் வைக்கவில்லை” என்று காட்கே குறிப்பிட்டுள்ளார்.மேலும், இந்த ஆவணங்கள் குறித்து கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

;