tamilnadu

img

அசாம், பீகாரில் கனமழை: பலி எண்ணிக்கை 209 ஆக உயர்வு

பாட்னா: 
அசாமின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் பார்பெட்டா உள்ளிட்ட 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் இந்த மாவட்டங்கள் தொடர்ந்து நீரில் மூழ்கியே இருக்கின்றன.இங்கு கனமழை மற்றும் வெள்ளப்பெருக்குக்கு பலியானோர் எண்ணிக்கை ஞாயிறன்று 82 ஆக உயர்ந்தது. இங்கு 1,716 கிராமங்களில் வசித்து வரும் 21.68 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வெள்ளநீர் வடியாததால் அவர்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. அசாமில் பாயும் பிரம்மபுத்திரா, தேசாங் உள்ளிட்ட நதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து அபாய அளவை தாண்டி செல்கிறது. அங்கு மழை, வெள்ள மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் பேரிடர்மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

இதைபோன்று பீகாரிலும் இந்த மாத தொடக்கத்தில் இருந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இங்குள்ள தர்பங்கா உள்ளிட்ட மாவட்டங்கள் மழை, வெள்ளத்துக்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பீகாரில் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 127 பேர் பலியாகி உள்ளனர். ல்வே தடை செய்துள்ளது. பீகாரில் வெள்ள மீட்பு பணிகளில் ராணுவம் மற்றும் விமானப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

;