பீகார் மாநிலத்தில் பாய்லர் வெடித்து சிதறிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம், மோதிஹரி அருகே சுகாலி பகுதியில் உள்ள நிறுவனத்தில் இன்று அதிகாலை சமையல் செய்துகொண்டிருந்தபோது பாய்லர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் சமையலறையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.