tamilnadu

img

புயல் எச்சரிக்கை கூண்டுகள் என்னதான் சொல்கின்றன?

தகவல் அறிவோம்

ஒன்றாம் எண்: எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டால் புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது என அர்த்தம். இதனால்துறைமுகம் ஏதும் பாதிக்கப்பட வில்லை. ஆனால் சற்றே பலமாக காற்று வீசுகிறது என்று பொருள். இரண்டாம் எண்: புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. இந்த எச்சரிக்கையைக் கண்டால், துறை முகத்தை விட்டு கப்பல்கள் வெளியேற வேண்டும். மூன்றாம் எண்: புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண்: கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து. 3 மற்றும் 4-ம் எண் கூண்டுகள், துறை முகத்தில் மோசமான வானிலை நிலவுவதைத் தெரியப்படுத்துகின் றன. ஐந்தாம் எண்: கூண்டு, புயல் உருவாகி இருப்பதைக் குறிக்கிறது. அத்தோடு துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கடக்கும் என்ப தற்கான எச்சரிக்கை ஆகும்.

ஆறாம் எண்: கூண்டு, 5 வது எண்ணின் எச்சரிக்கைதான். ஆனால் துறைமுகத்தில் புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும் நேரத்தில் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்று பொருள். ஏழாம் எண்: கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்ச ரிக்கை. 5, 6 மற்றும் 7-ம் எண் கூண்டுகள் துறைமுகத்துக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைக் குறிக்கிறது. எட்டாம் எண் புயல்: கூண்டு ஏற்றப்பட்டால், 'மிகுந்த அபாயம்' என்று பொருள். அதாவது புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது. அப்போது துறைமுகத்தின் இடதுபக்கமாக புயல் கரையைக் கடக்கும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. ஒன்பதாம் எண் புயல்: கூண்டுக்கு, புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்துள்ளது என்று பொருள். மேலும்துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கரையைக் கடந்து செல்லும். பத்தாம் எண் புயல்: எச்சரிக்கை விடப்படுமானால், அதி தீவிரப் புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் பெரிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக அர்த்தம். 11-ம் எண் புயல்: எச்சரிக்கைதான் உச்சபட்சமானது. இந்த எச்சரிக்கை விடப்படுகிறது என்றால், வானிலை எச்சரிக்கை மையத்து டனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று பொருள். 2018 நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலின்போது பாம்பனில் எட்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது.

பகிர்ந்தவர்: இராமநாதன்