முறைகேடாக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்து தலித் மக்களுக்கே வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி, பஞ்சமி நில மீட்புப் போராட்ட அறிவிப்பு மாநில சிறப்பு மாநாடு திருவள்ளூரில் ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய இம்மாநாட்டில் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் உரையாற்றினார். மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, நிர்வாகிகள் எஸ்.கே.மகேந்திரன், ஜி.ஆனந்தன், இ.மோகனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். (செய்தி : 5)