tamilnadu

img

அரசு பஸ்ஸில் போலித் திருக்குறள்

நான் இன்று (11/11/2019) காலை பள்ளி கொண்டாவில் இருந்து ஓசூருக்கு அரசு பஸ்ஸில் (TN 23 N 2463 ) பயணித்தேன். 

பஸ்ஸில் என்ன திருக்குறள் உள்ளது என்பதை உற்றுக் கவனித்தேன்.  திருக்குறள் இடம் பெறும் இடத்தில் குறள் போல் தோற்றம் அளித்த வரிகள் அதிர்ச்சி அளித்தது.

“எண்ணத்தில் சிவனை வைத்தால் எடுத்த காரியம் வெற்றியாகும்.”

இந்தத் திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லையே!

இதை எழுதியது யார்? இடம்பெறச் செய்தது யார்?
 

பக்கத்து இருக்கையில் இருந்த இளைஞர் சொன்னார்.

நிறைய பஸ்களில் இப்படிப்பட்ட குறள் போன்ற போலிக் குறள் மூலம் வள்ளுவரை கொச்சைப் படுத்துகிறார்கள்.

இது என்ன அரசு பஸ்ஸா? ஹெச்.ராஜா  பஸ்ஸா?

சு.பொ.அகத்தியலிங்கம்