பா.ரஞ்சித் பேச்சு
தமுஎகச சார்பில் திருச்சியில் நடைபெற்ற கல்வி உரிமை மாநாட் டில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் பேசியது: இன்றைய சூழலில் கம்யூனிசமும், அம்பேத்கரியமும் இணைந்து செயல்படுவது காலத் தின் கட்டாயம். நான் பெரிதும் மதிக்கின்ற கம்யூனிஸ்ட் தோழர்களு டன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சியடைகிறேன். கடவுளைப் பாடுகிற மொழியாக தமிழ் மாறும் போது யார் பாட வேண்டும். யார் பாடக் கூடாது என்று மாற்றுகிறார்கள். இவ்வளவு கோவில்கள், பெரிய, பெரிய மண்டபங்கள் இருந்த காலத்தில் ஏன் கல்வி குறித்த பல்கலைக்கழ கங்கள் இல்லை. பொதுவாக மக்கள் கூடும் இடங்கள் கல்வி யின் அடிப்படையில் தான் இருந்திருக்க வேண்டும். தலித்துகளுக்கு கல்வி என்பது பாவம் என்ற நிலை இருந்துள்ளது. அவர்களுக்கு சுயநலம் இருந்தாலும் ஆங்கி லேயர்கள் தான் ஏழைகளுக்கு கல்வியை வழங்கினர். அவர் களுக்கு நிலம் இருக்கிறது. படிப்பதற்கான எல்லா சூழலும் இருக்கிறது. எனக்கு நிலம் இல்லை. படிப்பதற்கான எந்த சூழலும் என் வீட்டில் இல்லை. இவ்வள வையும் மீறி நான் படிக்கும் போது, எனக்கு சிந்தனை வருகிறது. கேள்வி கேட்கிறேன். அவர்களுக்கு சமமாக உட்காருகிறேன். அது தான் அவர்களை ஆத்திரமடையச் செய்கிறது. சாதி உங்களுக்கு மூலதனம். எங்களுக்கு கல்வி தான் மூலதனம். இடஒதுக்கீட்டை இப்பொழுது குற்ற உணர்வாக மாற்றி விட்ட னர். தலித்துக்களுக்கு மட்டும் தான் இடஒதுக்கீடு உள்ளது போல நினைக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடும் தலித்துக்களுக்குத் தானா? சொல்லப் போனால் பொதுப்பிரிவுக் கூட ஒரு வகையில் இடஒதுக்கீடு தான். தகுதி, தகுதி எனக் கூச்சல் போடுபவர்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டை என்ன சொல்வீர்கள்? என்றார்.