tamilnadu

img

நூல் விற்பனையில் பள்ளிக்கு நன்கொடை

சென்னை, டிச. 28- ஆங்கில கவிதை நூல் வெளியீட்டு விழா வில் கிடைத்த உபரித் தொகையை பள்ளிக்கு  நன்கொடையாக வழங்கிய நெகிழ்ச்சியான நிகழ்வு சனிக்கிழமையன்று (டிச.28) சென்னை யில் நடைபெற்றது. ஐரிஷ் நாட்டை சேர்ந்தவர் ஃபியோன்னா. நீண்டகாலமாக சென்னையில் வசித்து வரு கிறார். அவரது ஆங்கில கவிதை தொகுப்பான  ‘ஏ காம்பவுண்ட் ஆப் வேர்ட்ஸ்’நூலை பிர வாத் மஹோபத்ரா வெளியிட கவிஞர் ஸ்ரீலதா  அறிமுகம் செய்தார்.  கவிஞர் ஃபியோன்னா, நர்சரி குழந்தை கள் கொண்டாடும் ஓர் ஆசிரியைப் போல  நடன அசைவுகளோடு தமது கவிதைகள் சில வற்றை வாசித்தார். மொழி, கண்டங்கள் கடந்து இசைக்கும் அந்தக் கவிதை தொகுப்  பில், மத வெறியர்களால் சிதைக்கப்பட்ட அசீபா குறித்தும், சம கால அராஜக நிகழ்வு களுக்கு எதிரான பிரதிபலிப்புகளும் தெறிக்  கின்றன. “என் குடும்பம், என் மகள், என் உறவுகள்  எல்லாமே சென்னையில்... நான் கவிஞராக உருப்பெற்றதில் சென்னைக்கு நிச்சயம் பெரும் பங்கு உண்டு” என்கிறார் ஃபியோன்னா. அவரது கவிதை புத்தகத்தின் விலை 195 ரூபாய். ஆனால் அரங்கில் 200 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்பட்டது. நூல் விற்று கிடைத்த உபரி தொகையை இந்தியன் வங்கி  ஊழியர் அசோசியேஷன் பள்ளி வளர்ச்சிக்கு வழங்கினார். இதற்கான ஏற்பாட்டை ஃபியோன்னா-வின்  நண்பர்களான லட்சுமியும்,  டி.ஆர்.கோவிந்தராஜனும் செய்திருந்தனர். ஃபியோன்னா பல ஆண்டுகளாகவே பள்ளிக்குத் தொடர்ந்து பல்வேறு  வகையில்  உதவி செய்து வருபவர் என்பது குறிப்பிடத் தக்கது.

;