tamilnadu

விவசாய விரோத நடவடிக்கையால் உள்ளாட்சியிலும் புறந்தள்ளப்படும் அதிமுக அணி

தமிழகத்தில் 30 உயர் அழுத்த மின்தடங்கள் ஏற்படுத்த மத்திய அர சின் பவர் கிரிட் கார்ப்ப ரேஷனும், தமிழக அரசும் முடிவு செய்திருக்கின்றன. இதற்காக திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள புகளூரில் ஆசியாவிலேயே இரண்டா வது பெரிய மின் பகிர்மான மையம் அமைக்கப்படுகிறது.இந்த மின் நிலை யத்தை தமிழகத்தின் அனைத்து பகுதி களில் உள்ள மின் உற்பத்தி நிலையங் கள், துணை மின் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் 30 வழித் தடங்கள் அமைக்கப்பட உள்ளன. புகளூரில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் வரை ஒரு மின்பாதை அமைக் கப்படுகிறது. மேலும், திருவலம், மைவாடி, அரசூர், இடையார்பாளை யம், திருச்சூர் ஆகிய இடங்களில் உயர் அழுத்த மின்பாதைகள் அமைக் கப்படுகின்றன. அதேபோல், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் சார்பில் அரசூர், ஈங்கூர், மைவாடி இணைப் புத் திட்டம், ராசிபாளையம், பாலவாடி திட்டம் என பல உயர் அழுத்த மின் பாதை திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.  இந்த மின்பாதை திட்டங்களின் பெரும் பகுதி கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள விளை நிலங் கள் வழியாகவே செல்கின்றன. இந்தத் திட்டத்தால், தாங்கள் வேளாண்மை செய்து வரும் நிலங்களைப் பறிகொடுக் கும் விவசாயிகள், வேளாண்மை செய்ய  முடியாமல் போவதுடன், கால்நடை கள், மரங்களை வளர்க்க முடியாது. மேலும் வீடு கட்டுவது, ஆழ்துளை  கிணறு பழுதடைந்தால் அதை பழுது பார்க்க முடியாது, நிலத்தின் மதிப்பு குறைவது என எண்ணற்ற இழப்புக ளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாவ தாகக் கூறி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  பல மாவட்டங்களில் விவசாயி களின் போராட்டத்தை காவல் துறை மூலம் ஒடுக்கி, விளைநிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமைப்பதற்காக போராட்டத்தில் ஈடு பட்ட போராட்டக் குழுவினர் கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டனர். இதிலும், கொச்சியிலிருந்து ஆப்பிரிக்காவிற்கும், மதுரையிலிருந்து இலங்கைக்கும், கேரளம், சென்னை நகரப் பகுதிகளில் மட்டும் கேபிள்  பதிக்கும் மத்திய, மாநில அரசுகள்,  இதைப் பின்பற்றி நெடுஞ்சாலையோ ரத்தில் நிலத்தின் அடியில் மின்சா ரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஆளும் அரசுகள் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.  புகளூர் - திருச்சூர் இடையே அமை யும் மின்பாதையில் தமிழக, கேரள வனப் பகுதியில் சுமார் 40 கி.மீ. தூரத் துக்கும், பெருநகரங்களைக் கடக்கும் போதும் நிலத்தடியில் வயர்கள் பதித்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், கிராமப்புறங்களில் மட்டும் வேளாண் வயல்கள் வழியே செல்வது ஏன் என் பதே இந்த விவசாயிகளின் கேள்வியாக உள்ளது.  நிலத்தின் அடியில் கேபிள்களை பதிக்க வழியே இல்லை என்று தமிழக அரசு கைவிரித்துவிட்ட சூழலில்தான்,  மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட் டது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட திமுக, சிபிஎம், சிபிஐ, மதிமுக உள் ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ் வாதாரத்தை பாதிக்கும் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந் தனர்.  ஆளும் அதிமுகவோ, பாஜக, பாமக, தேமுதிகவுடன் பலமான கூட்டணி அமைத்திருந்தாலும், அக்கட்சியின் வேட்பாளர்கள் விவசாயிகளை சந் தித்தபோது இந்த பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக எந்த வாக்குறுதியும் அளிக்க முடியவில்லை.  திமுக, கூட்டணிக் கட்சிகளோ, உயர் அழுத்த மின் கோபுர திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நடத்திய கோரிக்கை மேடைகளில் பங்கேற்று, இந்தத் திட்டத்தைத் தடுக்க முயற்சிப்போம் என்று வாக்குறுதி அளித்து வந்தனர். குறிப்பாக, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சுல்தான்பேட்டையில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்கு காவல்துறையின் தடுப்பை மீறி நேரில் சென்று ஆதரவை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அதிமுகவின் விவசாயிகள் விரோத நடவடிக்கையின் காரணமாக தேர்தல் முடிவுகள் ஆளுங் கட்சிக்கு பலத்த அடி விழுந்தது.  அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்பட்ட மேற்கு மண்டலத்தில் ஒரு தொகுதியைக் கூட அதிமுக கூட் டணியால் வெல்ல முடியவில்லை. இந்த சூழலில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தத் தேர்தலிலும் தங்களின் பிரச்சனையை முன்வைக்கத் தயாராகி வருகின்றனர் விவசாயிகள்.  ‘பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கோபமே மக்களவைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் தோல்விக்குக் கார ணமாக இருந்தது. இந்த உள்ளாட்சி தேர்தலிலும் விவசாயிகளின் பிரச்சனை நிச்சயம் எதிரொலிக்கும்’ என்கிறார். தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கத்தின் சட்ட ஆலோசகர் மு.ஈசன், ‘ ‘நாங்கள் எந்த அரசியல் கட் சிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் எங்களது கோரிக்கைகளை அலட்சியப்படுத்துபவர்களுக்கு நாங் கள் எதிரானவர்கள்தான்.   மக்களவைத் தேர்தலில் வென்ற கோவை, ஈரோடு, திருப்பூர், பொள் ளாச்சி தொகுதிகளின் கம்யூனிஸ்ட், திமுக, மதிமுக எம்.பி.க்கள் உயர் மின் கோபுர விவகாரம் தொடர்பாக மக்கள வையில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். விவசாயிகள் மீதான நடவடிக்கைக்கு காரணமாக இருக்கும் 1885 ம் ஆண்டின் தந்தி சட்டத்தை நீக்க வல்லுநர் குழு அமைக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரவும் எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர்.  அதேநேரம், இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்கும் வாய்ப்பு ஆளுங் கட்சிகளுக்கு இன்னமும் இருந்தாலும் அவர்கள் கண்டும் காணாமலும் இருக் கின்றனர். திட்டங்களை செயல்படுத்து வதற்கு காவல் துறையையும், வரு வாய்த்துறையையும் அனுப்பும்  ஆளும் கட்சிகள், தேர்தல் நேரத்தில் விவசாயிக ளின் வாக்குகளைக் கேட்க மட்டும் அவர்களின் வேட்பாளர்களை ஏன் அனுப்ப வேண்டும் என்ற கேள்வியே விவசாயிகளிடம் உள்ளது. இந்தத் தேர்தலில் எந்த நிலைப்பாடு எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய  26 இடங்களில் ஒன்றியம் வாரி யாக விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  தமிழ்நாட்டின் மேற்கு, வடக்கு மாவட்டங்களில் சுமார் 8 ஆயிரம் கோபுரங்கள் அமைக்கப்படும் நிலையில், சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின் றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்கும் வேட்பாளர்களையும், எங்களு டன் இணைந்து களம் காணும் வேட்பா ளர்களையுமே நாங்கள் ஆதரிப்போம்’ என்கிறார் ஈசன்.  ‘உயர் அழுத்த மின்கோபுரம் மட்டும் பிரச்சனை இல்லை, ஏற்கெனவே அறி விக்கப்பட்டு விளைநிலங்களுக்குள் நுழைவதற்குத் தயாராக இருக்கும் கெயில் திட்டமும் விவசாயிகளின் பிரச்சனைதான்’ என்கிறார் ஈரோடு  மாவட்ட விவசாயிகள் வாழ்வாதா ரக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எம்.கோபால். ‘கேரள மாநி லம் கொச்சியில் இருந்து பெங்களூரு வுக்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் மத்திய அரசின் கெயில் நிறுவனத் தின் திட்டத்தால், கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி என 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படு கிறது.  இந்தத் திட்டத்துக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் திட்டத்துக்கு தடையும் விதித்திருந்தார். ஆனால், அந்தத் தடை விலக்கப்பட்டுள்ளது. விரைவில் திட் டத்தை நிறைவேற்றுவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், ஜெயலலிதா வழியில் நாங்கள் நின்று திட்டத்தை எதிர்ப்போம் என்று ஆளுங் கட்சி உறுதியாகத் தெரிவிக்காமல் மெளனமாக உள்ளது. பெங்களூருவில் இருந்து கிருஷ்ண கிரி மாவட்டம் தளி வரையிலும் இந்தத் திட்டம் தேசிய நெடுஞ்சாலை, மாநில,  ஊரக சாலைகள் வழியாகவே செயல்ப டுத்தப்படுகிறது. ஆனால் மற்ற பகுதிக ளில் மட்டும் சாலை வழியாகச் செல்லா மல் விவசாயிகளின் நிலங்கள் வழியாக ஏன் செல்கிறது என்ற கேள்விக்கு விடை அளிப்பார் யாரும் இல்லை. கெயிலைப் போலவே பாரத் பெட்ரோலியம் நிறு வனத்தின் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டமும் இதே 7 மாவட்ட விளைநிலங்க ளில் செயல்படுத்தப்பட உள்ளது.  இவ்வாறு கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக ஒட்டு மொத்த விவசா யத்தையும் அழிக்க மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகள் துடிப்பதாக விவசாயிகள் தங்களது குமுறல்களை  வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். ஆனாலும் ஆளும் அதிமுக அரசு இதுகுறித்து கொஞ்சமும் அக்கறை செலுத்துவதாக தெரிய வில்லை. மக்களவை தேர்தல் தோல் வியை அடுத்து உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவை விவசாயிகள் புறந்தள்ளு வார்கள் என்றே அரசியல் நோக்கர் களின் கருத்தாக உள்ளது.  - அ.ர.பாபு

;