tamilnadu

img

பெரியாரை இழிவுபடுத்திய பாஜக ட்விட்டர் பதிவு

சென்னை,டிச.24- தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் வகையில், தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்  தில் ரீட்வீட் செய்யப்பட்டு பதிவு பின்னர் நீக்கப் பட்டது. தந்தை பெரியாரின் 46வது நினைவு நாள் டிச.24  அன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக  பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பெரி யாரை இழிவுபடுத்தும் வகையில் ட்வீட் ஒன்று பகிரப்பட்டிருந்தது. “மணியம்மையின் தந்தை ஈவே.ராமசாமியின் நினைவு தினமான இன்று... குழந்தைகள் மீதான  பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கு வதை ஆதரித்து, போக்ஸோ குற்றவாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதிகொள் வோம்” என அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டி ருந்தது. உடனடியாக கண்டனங்கள் எழுந்த நிலை யில், தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.