tamilnadu

img

மக்களை பங்கேற்கச் செய்வதால் கிடைக்கும் பயன் என்ன? - க.பழனித்துரை

சென்னை,ஜன.18- பிறக்கும் குழந்தைகளுக்கு இளம் பிள்ளை வாதம் என்னும் நுண்கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்று தான் போலியோ. இந்த நோயானது குழந்தைகளையே அதிக  அளவில் பாதிக்கும். 1988 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த நோயை கட்டுப்படுத்த உலக சுகாதார மையம் சார்பில் முயற்சிகள் முன்னெ டுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக போலியோ சொட்டு மருந்தை, உலக நாடு களில் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்தப்பட்டது

போலியோ நோய் பெரும்பாலும் 5  வயதுக்குட்பட்ட குழ்ந்தைகளையே குறி வைக்கும். தண்ணீர் மூலமாகவும் சாப்பாடு மூலமாகவும் நோய் தொற்று ஏற்பட்டு, இது  குழந்தைகளின் உடலில் பரவி நரம்புகளை தளர்ச்சி அடைய செய்வது, பக்கவாதம் ஏற்படுத்தி கை, கால்களில் நிரந்தர ஊனம் ஏற்படுத்துவது போன்ற அபாயம் ஏற்படும். ஒருமுறை போலியோ தாக்கிவிட்டால், அதை குணப்படுத்த மருந்துகள் கிடையாது. ஆகையால் தான் வரும் முன் காப்போம் என்ற பழமொழியின் அடிபடை யில் வருடத்திற்கு 2 முறை தமிழ்நாடு அரசு  சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து குழந்தை களுக்கு கொடுக்கப்படுகிறது.

இன்று முகாம்

தமிழகம் முழுவதும் இன்று (ஜன.19) போலியோ தடுப்பு முகாம்கள் மூலம் 72 லட்சம்  குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில், சிறப்பு  முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வழக்கமாக  40 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படும். ஆனால், தற்போது ஒரே தவணையில்  போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வுள்ளதால், 50 ஆயிரம் முகாம்களை அமைக்க  திட்டமிடப்பட்டுள்ளது. சொட்டு மருந்து வழங்  கும் பணிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்  பட்ட பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக சுகாதா ரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிள்ளைகளின் எதிர்காலத்தையும் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு போலியோ சொட்டு மருந்து போடுவதை தவிர்க்காமல் இருப்பது மிக அவசியம் என்பதை உணர்வோம்.
 

;