tamilnadu

img

பயமா… அப்படீன்னா…!

தோழர் ஜீ.வீ காலம் நமக்குத் தந்த கொடையாகும். பன்முகத் தன்மை கொண்ட அவர் பயம் என்றால் என்ன….? என்று கேட்டு களமாடியவர்.
சிம்ம சொப்பனம்
செங்கொடி இயக்க பிளவுக்கு பின்பு ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தில் ஆளும் கட்சியும், அரசு இயந்திரமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கோலோச்சிய காலம். நீதி மன்றம், வருவாய் நிர்வாகம், காவல்துறை, ஊடகங்கள் அனைத்தையும் விரல் விட்டு எண்ணக் கூடிய நிலச்சுவான்தார்களே ஆட்டிப் படைத்தார்கள்.  அந்த அடக்குமுறை காலத்தில் தான் தோழர் கோ.வீரய்யன் தலைமையில் கே.ஆர்.ஞானசம்பந்தன், பி.எஸ்.தனுஷ்கோடி, கோ. பாரதிமோகன், தஞ்சை என்.வெங்கடாசலம், நாகை வி.மீனாட்சிசுந்தரம், எம்.செல்லமுத்து, வி.தம்புசாமி, எஸ்.கணேசன், வி.எம்.முத்துசாமி, கே.பி.நடராஜன், திருத்துறைப்பூண்டி எம்.வேதையன், பி.வைரன், ஆர்.சி.பழனிவேல், தரங்கம்பாடி எத்திராஜ், என்.கோவிந்தராஜ், தஞ்சை எம்.சண்முகம் இன்னும் ஏராளமான அப்பழுக்கற்ற மார்க்சிஸ்ட் ஊழியர்கள் செயல்பட்டார்கள்.  தஞ்சை மாவட்டக் கட்சிக்கு வழிகாட்டியாக நுண்ணறிவு படைத்தவராக எளிமையின் அடை யாளமாக உழைக்கும் வர்க்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக அரசு எந்திரத்திற்கு சிம்ம சொப்பன மாக விளங்கி வரலாறு படைத்தவர் தோழர் வீரய்யன்.
பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்து 
விவசாயத் தொழிலாளர்களுக்கு செங்கொடி போராட்டத்தின் விளைவாக நியாயக் கூலி சட்டம் வந்த பிறகு நில பிரபுகள் வெளியூர் ஆட்களை வைத்து வேலை செய்ய முடியாது என கருதி விவசாய உற்பத்தி பெருக்கம் என்ற அடிப்படை யில் விவசாயத் தொழிலாளர்கள் வேலையை பறிக்கும் வகையில், உழவுக்கு டிராக்டரை இறக்கி வேலை இல்லாமல் மக்களை வஞ்சித்தார்கள்.  அதற்கு எதிராக மாவட்டம் முழுவதும் டிராக்டர் மறியல் நடத்த வேண்டும் என முடிவு செய்தது. மறியல் போராட்டம் பண்ணை ஆதிக்கத்தை எதிர்த்து சுற்று வட்ட கிராமம் முழுவதும் நடந்தது. குறிப்பாக நமசிவாயபுரம் மறியலில் ஈடுபட்ட தோழர் எம்.செல்லமுத்துவை கீழ்வேளுர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தனது பூட்ஸால் வயிற்றுப் பகுதியில் உதைத்து சேற்றில் அமுக்கினார். அதுவே அவரது மர ணத்திற்கு காரணமாக அமைந்தது.
வஞ்சகம்
மார்க்சிஸ்டுகள் கூலிப் போராட்டம் நடத்து வார்கள். நாங்கள் நிலம் எடுத்து கொடுப்போம். நில உரிமையாளராக ஆக்குவோம் என்ற சர்வோதய அமைப்பின் தவறான வஞ்சக பிரச்சாரம் நமது கட்சி போராட்டத்திற்கு பின்ன டைவு ஏற்படும் விதமாக இருந்தது. இந்த சதியை உடைத்து தோழர் ஜீ.வீ மாவட்ட செயற் குழுவை கூட்டி வலிவலம் தேசிகர் நிலம் உச்ச வரம்பு- பினாமி அறக்கட்டளைக்கு எதிரான போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்தார். தேசிகர் நில ஆவணங்கள், ஆர்.டி.ஆர் அனைத்தையும் பதிவு செய்ய இதில் ஆளும் கட்சி சர்வோதய அமைப்பிற்கு ஆதரவாக, தேசிக ருக்கு எதிராக சில ஏக்கர் நிலங்களை மறைமுக மாக பதிவு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தோழர்கள் மூலம் தேசிகர் காதுக்கு போகும் அளவுக்கு ஒரு பிரச்சாரத்தை செய்வோம்.  இதில் தேசிகர் புரிந்து கொண்டு நம்மை பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் நாம் அதை பயன் படுத்துவது என்ற ஜீ.வீயின் ஆலோசனையை கட்சியின் மாவட்ட செயற்குழு ஏற்றது. விவசாயத் தொழிலாளர்கள் தேசிகர் வரும் போது அவரை பார்த்து நில உச்ச வரம்பில் அரசு எடுக்கும் முன் அதை ஆண்டாண்டு காலம் உழைச்ச எங்க ளுக்கு கொடுக்க கூடாதா என்று கேட்டனர்.  அதற்கு பார்ப்போம் என்ற தேசிகர் நாளை மறுநாள் எட்டுக்குடி வடிவேல்(வலிவலம் கிளை செயலாளர்) மூலம் பேச்சுவார்த்தைக்கு உங்கள் தலைவரை வரச் சொல்லு என்று சொல்லி அனுப்பினார். தோழர்கள் ஜீ.வீ, அன்றைய கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.ஜி, விவ சாய சங்கச் செயலாளர் வி.கே.முத்துசாமி, கிளைச் செயலாளர் என்.வடிவேல் இவர்க ளோடு தேசிகர் தரப்பில் அவரது உறவினர்க ளான வேதசுந்தரம்பிள்ளை, நாகனூர் அப்பாதுரைப்பிள்ளை மற்றும் நிலச்சுவந்தார்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை பகல், இரவு முழுவதும் நடந்தது. ஒப்பந்தம் கையெழுத்து போடும் வரை தண்ணீரைத் தவிர வேறு எதை யும் நாங்கள் உட்கொள்ள மாட்டோம் என்று தலைவர்கள் உறுதியேற்றனர். விடியல் காலை 5.20 மணிக்கு தேசிகர் மாடியிலிருந்து கீழே வந்தார். நான் உங்களோடு 30 ஆண்டுகள் யுத்தம் நடத்தினேன். அதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். அது இன்றோடு முடியட்டும். ஆனால் என்னுடைய வாழ்நாள் அனுபவத்தில் நீங்கள் நல்லவர்கள், நேர்மையானவர்கள், அப்பழுக்கு அற்றவர்கள் என்பதை நான் அறிவேன் என்றார்.  இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1972-ஆம் ஆண்டு மனித உரிமை போராளி பி.சீனிவாச ராவ் நினைவு தினத்தில் விவசாய சங்க மாநிலச் செயலாளர் ஆர்.ராமராஜ் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் 240 பேர்களுக்கு 278 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. நிலம் கொடுப்போம் என்று சொன்ன சர்வோதய அமைப்பு காணாமல் போனது என்பது நீண்ட வரலாறு.
வழிகாட்டியாக முன் நின்றவர்
அதே போல் வேப்பத்தாங்குடி குப்புசாமிப் பிள்ளைக்கு எதிரான போராட்டம், பூந்தா ழங்குடி, புள்ளமங்கலம், நன்னிலம் தாலுகா  திருக்கொட்டாரம் போராட்டம், பின்பு வருவாய்த் துறை அமைச்சர் குருசாமி பிள்ளைக்கு எதிரான போராட்டம், தஞ்சை மேற்கு பகுதியில் நடை பெற்ற சாதிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம், நாடு தழுவிய ஒரு பகுதியாக குடவாசலில் 22.08.1994-ல் நடந்த போராட்டம், டங்கல்திட்ட எதிர்ப்பு போராட்டம் என அனைத்து போராட்டங்களிலும் வீரத்துடன் அச்சமின்றி தோழர்களுக்கு வழிகாட்டியாக முன் நின்றவர் தோழர்.ஜீ.வி.  குடவாசல் போராட்டத்தின் போது தோழர் தங்கையன் படுகொலைக்கு ஆளானார். தங்கையன் கொலை வழக்கை நடத்திய மூத்த தலைவர் டி.அய்யாறு பின்னாளில் பேரூராட்சி தலைவரானார். முன்னாள் அதிமுக பிரமுக ரான எம்.ராஜேந்திரன் கடையில் வெடிகுண்டை வெடித்ததாக தோழர் ஜீ.வீ உள்ளிட்டோர் மீது புனையப்பட்ட பொய் வழக்கு ஒன்றுமில்லாமல் போனது. செங்கொடியின் நிழலில் நீண்ட பயணம் எனும் அவரது சுயசரிதை நூல் வெறும் நாவ லல்ல. ரத்தமும் சதையுமாக அடக்குமுறைக்கு அஞ்சாமல் தனது வாழ்நாள் முழுவதும் போராடிய ஒரு வீரமகனின் வீர வரலாறாகும். தோழர் ஜீ.வீ. அவர்களின் நிலைத்த புகழுக்கு சமரசமற்ற அவரது போராட்ட வாழ்க்கையே காரணமாகும். எளிமை, அர்ப்பணிப்பு, சேவை மனப் பான்மை, தோழமை என்ற குணங்களோடு அச்ச மற்ற அவரது போர்க்குணம் தனித்துவம் வாய்ந்தது. நிகரற்றது. அவரின் குணநலங்களை உள்வாங்கிக் கொண்டு தேச நலனுக்காக, மக்கள் நலனுக்காக உழைத்திட இந்நாளில் உறுதியேற்போம்.

ஜி.பழனிவேல், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிபிஐ(எம்), திருவாரூர் மாவட்டக்குழு.

;