tamilnadu

img

சிறையில் சித்ரவதை அனுபவித்த அப்பாவி முஸ்லிம்கள்... தில்லியில் கலவரம் தூண்டியது ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களே- 4

புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகளில் ஒருவர், வேத் பிரகாஷ் சூர்யா. அவர்தான் கபில்மிஸ்ரா அந்த வெறியூட்டும் பேச்சை நிகழ்த்திய போது அவருக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தவர். மேலும் அனுஜ் குமார், தினேஷ் சர்மா இவர்கள் இருவரும் கூடுதல் காவல் ஆணையர்கள். தர்கேஷ்வர் சிங், இவர்தயால்பூர் காவல் நிலையத்தில் வன்முறை நிகழ்ந்த போது காவல் நிலைய அதிகாரியாக இருந்தவர். அவர் பெயரும் புகார்களில் உள்ளது. அதேபோன்று ஆர்.எஸ்.மீனா, இவர் பக்கத்திலிருந்த பாஜன்பூரா காவல் நிலைய அதிகாரி, இவரின் பெயரும் உள்ளது.  

உச்சநீதிமன்றம், பல முறை தெள்ளத் தெளிவாக்கியுள்ள ஒரு விஷயம், ஒரு புகாரில் தண்டனை பெறும் குற்றம்(காக்னிசிபிள் ) குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த புகாரின் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்என்பதாகும், இருப்பினும், மேலே சொல்லப்பட்ட பாஜக தலைவர்கள் எவர் மீதும் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதைப் போலவே புகார்களில் குறிப்பிடப்பட்ட எந்த காவல் அதிகாரியின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை, அவர்கள் மீது துறைவாரியான விசாரணையோ அதன் மீது நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.   காவல்துறை தனது செயலின்மைக்கு நியாயம்கற்பிக்கும் முயற்சியில், இந்த புகார்கள் காலதாமதமாக வந்தன என்கிறது. ஆனால், அதுஉதாசீனப்படுத்துவது எதையெனில், காவல்துறை எந்தளவுக்கு அந்த புகார்களை பதிவுசெய்யாமல் இருக்க அழுத்தம் கொடுத்தது என்றும், முக்கிய விவரங்களையும் பெயர்களையும் அமுக்க எத்தனை முயன்றது என்றும் அந்த புகார்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என்ற உண்மையைத்தான்.

ஏராளமான புகார்கள் இருந்தும்...
தில்லி காவல்துறை இந்த தாக்குதலின் மிக முக்கிய அம்சங்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதில் தவறியுள்ளது. ஏராளமான புகார்கள் எப்படி இந்துத்வா வெறிக் கும்பல்கள், பஜன்புரா காவல் நிலையத்திற்கு அருகிலிருந்த  தனியார் மருத்துவமனையான மோகன்நர்சிங் ஹோம் மற்றும் மருத்துவமனையி லிருந்து, காவலர்கள் இருக்கும் போதே  துப்பாக்கியால் சுட்டன , பெட்ரோல் எரிகுண்டுகளை வீசின, கற்களை வீசின என்பதை குறிப்பிடுகின்றன. இந்துத்வா வெறிக் கும்பல்கள் அந்த நர்சிங்ஹோம் மேற்கூறையிலிருந்து சுடும் வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அதே நேரம் அந்தமருத்துவமனைக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் மேல் பகுதியில் உயிருக்கு பயந்து ஒளிந்திருந்தஒரு முஸ்லீம் குண்டடிபட்டு இறந்துள்ளார். இருப்பினும் காவல்துறை இந்த மருத்துவமனையை இந்த வழக்கில் விசாரிக்கவில்லை.

இந்த இந்துத்வா வெறிக் கும்பல்களை விசாரிப்பதற்கு பதிலாக, காவல் துறையின் மீதான புகார்களை விசாரிப்பதற்கு பதிலாக, அரசியல்வாதிகளின் பங்கு பற்றி விசாரிப்பதற்கு பதிலாக தில்லி காவல்துறையானது சந்தேகத்திற்கிடமான சாட்சியங்களைக் கொண்டு, அந்த பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள்மீதும், சிவில் உரிமைகளுக்காக போராடுபவர்கள், சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்கள் மற்றும்முக்கியமான முஸ்லீம் பிரமுகர்கள் மீதும், கூட்டுசதி செய்து வன்முறையைத் தூண்டினர் எனகுற்றம் சுமத்த முயல்கிறது. தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இந்த சதிகாரர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் மீது கொடுரமான யுஏபிஏ சட்டப்பிரிவின் கீழ் குற்றம் புரிந்தவர்கள் என்று தெரிவிக்கிறது. ஆகஸ்ஸ் கடைசி வாரம் வரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரே ஒருவர் மட்டும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் போலீசும், தில்லி போலீசும்
2002ல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரானவன்முறையானது, நரேந்திர மோடி அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்த போது அம்மாநிலம் அவரின் நேரடி கண்காணிப்பில் இருந்த போதுதான் நடந்தது. அங்கு இரத்தம் சிந்தப்பட்ட பிறகு அந்த வன்முறையை தங்களது கட்டுபாட்டு பகுதியில்  தடுக்க முயன்ற அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர், அதேபோன்று மோடியும் பாஜகவும் அந்த வன்முறைகள் பின்னணியில் இருந்தனர் என்று உண்மையை வெளியில் சொன்ன அதிகாரிகளும் தண்டிக்கப்பட்டனர். கும்பல்கள் விரும்பியவாறு செயல்பட அனுமதித்த காவல்துறை அதிகாரிகள், இந்த குற்றச் செயல்களில் குஜராத் மாநிலஅரசியல் தலைமைக்குழு இருந்த தொடர்பை மூடி மறைக்க உதவிய அதிகாரிகள் தகுந்த பரிசுகளை பெற்றனர். அந்த நேரத்தில் குஜராத் காவல்துறை, அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவின் நேரடி கட்டுபாட்டில் இருந்தது. இன்று இங்கே, தில்லி காவல்துறை மத்திய அரசுக்கு பதிலளிக்க கடமைப்பட்டது, அதிலும் குறிப்பாக  மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு. தற்போதைய அரசின் தலைவர் நரேந்திர மோடி, மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷாவுக்கு.தயால்பூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர் சிறார், 17 வயதுமுஸ்லீம். முதல் தகவல் அறிக்கை 58ல் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். அவர் காவலர்களால் எப்படி நடத்தப்பட்டார் என்று தெரிவிப்பது ஆலம் மற்றும் ராஸி ஆகியோர் தெரிவித்ததோடு மிகவும் சரியாக ஒத்துப்போகிறது:

“பிப்ரவரி 24ஆம் தேதி நான் வேலையிலிருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் காவல் அதிகாரிகள் என்னை நிறுத்தினர். அவர்கள் எனது பெயரை கேட்டு விட்டு என்னை கம்பால் தாக்கத் தொடங்கினர்,  பிறகு என்னை வேனில் தள்ளினர். அங்கு ஏற்கனவே 3 அல்லது 4 பேர் இருந்தனர்-அவர்கள் அனைவரும் முஸ்லீம்கள்.”தயால்பூர் காவல் நிலையத்தில் உள்ள லாக் அப்பில் அவர்களை காத்திருக்கவைத்தார்கள். விரைவிலேயே தாக்குதல் தொடங்கியது. “அவர்கள் அப்படியே உள்ளே வருவார்கள் எங்களை அவர்களின் பெல்ட்களால் அடிப்பார்கள்” என்கிறார் அந்த 17 வயது சிறுவன். “அவர்களிடம் நாங்கள் வேலைக்கு போய்விட்டுத்தான் திரும்புவதாக தெரிவித்தோம். அவர்களுக்கும் அது தெரிந்திருந்தது. எந்தளவுக்கு எங்களுக்கு விழுந்த அடி கடுமையாக இருந்தது என்றால்,அடிக்கும் அடியில் கம்புகள் உடைந்துவிடும், பெல்ட் பிய்ந்து விடும்”. தன்னை அவர்கள் அடிக்கும் போது தனது கால்கள் கட்டப்பட்டதாகவும், பின்பக்கம் உடல் முழுவதும் அடிபட்டகாயங்கள் இருந்தது என்கிறார் இந்த சிறுவன்.

தெளியவைத்து தெளிய வைத்து அடித்தார்கள்...
அடிக்கும் போது ஒருவர் மயங்கி விழுந்தால் அந்த போலீசார் தண்ணீரை ஊற்றி நினைவு திரும்ப செய்வார்கள், பின்னர், நடிக்கவா செய்கிறாய்” என்று வசவு பாடி மீண்டும் அடிக்கதொடங்குவார்கள். சில பேர் மாடிக்கு கொண்டுபோகப்பட்டனர். “அவர்களின் உடைகளைக் களைந்து கொடும் சித்ரவதைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். அந்த சித்ரவதை பிப். 28  நீதி மன்றத்தில் ஆஜர் செய்வது வரை தொடர்ந்தது.

... தொடரும் 
 

;