tamilnadu

img

டெல்டாவைப் பாதுகாப்போம்!

மற்றொன்று, பெட்ரோலிய எரிபொருள் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது.  அதனால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலையில் ஏராளமான எண்ணெய் துரப்பன பணிகள் நடைபெற்று வருகின்றது.  பல இடங்களில் எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் உடைந்து நஞ்சை நிலங்கள் பாழாகி வருவதும் நடைபெற்று வருகிறது. எரிபொருள் தேவைக்கான மாற்றை நோக்கி நாம் முன்னேற உறுதியான முயற்சி தேவைப்படுகிறது.

இந்த வருட அட்சய திருதியை முன்னிட்டு வலைத் தளங்களில் ஒரு செய்தியைப் பார்க்க முடிந்தது.  அதில் அன்றைய தினத்தில் எதை வைத்து வணங்கி னாலும் அந்தச் செல்வம் பெருகும் என்பது ஐதீகமாம். அதனால் எல்லோரும் தண்ணீரைக் கடவுள் முன் வைத்து, அது பெருக  வழிபடுங்கள் என்ற செய்தி வந்தது. சற்றே நகைச்சுவையாக இருந்தாலும் அதன்பின் இருக்கும் உண்மையை உணர வேண்டும். ஒட்டுமொத்த மாக இந்தியா நீர்வளம் குறைந்து கொண்டே போகும் நாடாக மாறத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் மத்திய  அரசும், மாநில அரசும் சிறந்த மண்வளமும், நீர்வளமும் உள்ள காவிரி டெல்டாவில் பலஆயிரம் ஆண்டுகளாக, சிறப்பாக நடைபெற்று வரும் வேளாண்மையை முற்றிலும் அழித்துப் பாலைவனமாக மாற்றும் முயற்சிகள் துவங்கிவிட்டன. ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்கு ஜுன்12 தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஒருமுறை கூட ஜுன் 12ல் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.   நடப்பாண்டும் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் குறுவை சாகுபடி செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது டெல்டா பகுதி முழுவதும் கடும் வறட்சி நிலவு கிறது.  சாகுபடிக்குமட்டும் அல்ல, குடிநீருக்கும் நிலத்தடி நீரை நம்பித்தான் டெல்டா மக்கள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளில் 3 மீட்டர் முதல் 8 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் சரிந்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் தமிழக அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.  அதில், தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வரு கிறது.  இந்நிலையில் நிலத்தடி நீர் மட்டத்தைப் பெருக்கப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.  இல்லை யெனில், வரும் காலங்களில் நிலத்தடி நீர் மூலம் தண்ணீர் பெற முடியாத நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

அழிக்கும் பணி துவக்கம்
ஒருபுறம் பருவம் தவறிய மழை, வறட்சி, வெள்ளம், புயல் ஆகியவற்றில் பாதிக்கப்பட்டும், மறுபுறம் டெல்டாவின் பகுதி களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறி வருவதும் கண்டு வேத னையில் வாடி நிற்கும் டெல்டா மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளன,  மோடி, எடப்பாடி அரசுகள். தமிழகத்தின் காவிரி படுகை சாகுபடி பரப்பளவு 23 லட்சம் ஹெக்டேர் ஆகும்.  ஆனால் இந்தப்பரப்பளவு ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.  இப்போது சாகுபடிப் பரப்பளவு 2018-2019 ஆண்டில் 8.61 லட்சம் ஹெக்டராக சுருங்கிவிட்ட நிலையில் இதையும் அழிப்பதற்கான பணி துவங்கி விட்டது. நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங் கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 6000 சதுர கிலோ மீட்டருக்கு மேல் பரப்பளவிலான விளை நிலப்பகுதி களில் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு 274 கிணறுகளும் ஒ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 67 கிணறுகளும் அமைக்க ஒப்பந்தமாகி உள்ளது. மத்திய அரசு தற்போது சோதனைக்கு அனுமதி வழங்கி உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டமானது நூறு ஆண்டுகள் மட்டும் செயல்படுத்த முடியும்.  அந்த அளவுக்குத்தான் இந்தப் பகுதியில் நிலத்தடியில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொ ருள்கள் உள்ளன.   ஆனால் இந்த நூறு ஆண்டுகளுக்குள் நிலம், நிலத்தடி நீர், காற்று மாசுபடுத்தப்பட்டு விடும்.  குறிப்பாக மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாறும் அபாயம் ஏற்படும்.

காரணம், இங்குஹைட்ரோ ப்ராக்கிங் முறையில்தான் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  ஹைட்ரோ ப்ராக்கிங் என்பது, பூமிக்கு அடியில் 10ல் இருந்து 15 ஆயிரம் அடியில் கீழே உள்ள பாறைக்குள் படிந்து இருக்கும் எண்ணெய், எரி வாயுவை வெளிக்கொண்டு வருவதற்காகக் குழாய்களில் ஏற்படுத்தப்படும் சிறுசிறு துளைகள் மூலம் வெடிப்பொ ருட்கள் செலுத்தப்பட்டு சரியான இடங்களில் வெடிக்க வைக்கப்படுகிறது. அத்துடன் ஒவ்வொரு இடத்திலும் 20 கோடி லிட்டர் தண்ணீ ருடன் மணலும் கலந்து 600 வகையான ரசாயனப் பொருட்கள் கலந்து பூமிக்கு அடியில் செலுத்தும்போது வெடி வைத்ததால் பாறைகளுக்குள் அடைப்பட்டிருந்த எண்ணெய் எரிவாயு வெளியேறி தண்ணீர் மணல் வேதிப்பொரு ளோடு மேலே கொண்டு வரப்படும். மேலே கொண்டு வரும்போது ஏற்படும் இன்னொரு அபாயம், நிலத்தடி நீரின் பெரும் பகுதி, பாறைகள் உள்ள பகுதியிலிருந்து சில ஆயிரம் அடிகளுக்கு மேற்பரப்பில் தான் உள்ளது. எனவே கீழிலிருந்து மேல் நோக்கி வரும் எண்ணெய்,  எரிவாயு வேதிப்பொருட்கள் கலந்த கலவையோடு மேற் பரப்பில் உள்ள நல்ல நீரும் பெரும் பகுதி வெளியேறும். இதன் காரணமாக, இத்திட்டம் நிறைவேற்றப்பட்ட குறுகிய காலத்திலேயே டெல்டாவின் நிலத்தடி நீராதாரம் அழிந்து விட்டால் வேளாண்மை மட்டும் அல்ல உயிர் வாழக் குடிநீரும் கிடைக்காத அபாய நிலை ஏற்படும். எனவே, டெல்டா மாவட்ட மண்வளத்தை அழித்து, நிலத்தடி நீரை மாசுபடுத்தி, வேளாண்மையை அழித்து, குடி யிருப்புகளை அப்புறப்படுத்தி, எண்ணெய் எரிவாயு எடுக்க வேண்டிய தேவை என்ன வந்தது?

எரிவாயு தயாரிப்பு

2008ம் ஆண்டு,தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் கோ.4 தீவனபுல் ஒரு ஹெக்டேரில் சாகுபடி செய்தால் 80 லட்சம் கன லிட்டர் எரிவாயு கிடைப்பதாகக் கூறி யுள்ளனர். மேலும் 1 கிலோ கரும்புச்சக்கையில் இருந்து 330 லிட்டர் எரிவாயு ஒரு கிலோ சாணத்தில் இருந்து 40 லிட்டர் எரிவாயு பயன்படுத்தப்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து ஒரு கிலோவிற்கு 345 லிட்டர் எரிவாயு ஒரு கிலோ உணவு கழிவில் இருந்து 160 லிட்டர் எரிவாயு தயாரிக்கலாம் எனத் தெரிவித்து உள்ளனர்.  மேற்கண்டவற்றை உலகில் பல நாடுகள் நடைமுறையில் அமலாக்கி வருகின்றன. இப்படியான எரிவாயு தயாரிப்பின் மூலம் மண், நிலம், நீர்வளம் பாதுகாப்பதோடு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படாமல் பாதுகாக்கவும் முடியும்.  மற்றொன்று, பெட்ரோலிய எரிபொருள் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளது.  அதனால் உள்நாட்டு உற் பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலையில் ஏராள மான எண்ணெய் துரப்பன பணிகள் நடைபெற்று வரு கின்றது.  பல இடங்களில் எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் உடைந்து நஞ்சை நிலங்கள் பாழாகி வருவதும் நடைபெற்று வருகிறது.

எரிபொருள் தேவைக்கான மாற்றை நோக்கி நாம் முன்னேற உறுதியான முயற்சி தேவைப்படுகிறது. இன்று உலகில் கிடைக்கும் தோரியத்தில் 50 சதம் இந்தியா வில் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகம்-ஆந்திரா- ஒடிசா கடற்கரைகளில் மணலாகக் கொட்டிக் கிடக்கி றது. காரில் இப்போது பயன்படுத்தப்படும் பெட்ரோலிய  எரிபொருளுக்கு பதிலாக தோரியத்தை எரிபொருளாக பயன்படுத்தும்ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது. இப்போதுள்ள காரின் எஞ்சின் பாகத்தை மட்டும் மாற்றி னால் போதும். அமெரிக்காவைச் சேர்ந்த லேசர் பவர் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் இத்தகைய எஞ்சினை தயாரித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஒரு கிராம் தோரியம் 28 ஆயிரம் லிட்டர் எரிபொருளுக்குச் சமமானது.

தோரியம் கார்களைப் பயன்படுத்தும்போது, சுற்றுச்சூழ லும் பாதுகாக்கப்படும். காரணம், பெட்ரோலிய  எரிபொருட்க ளில் இருந்து வெளியாகும் கரியமில வாயு இதில் இருந்து முற்றிலும் வெளிவராது.இத்தகைய கார் பயன்பாடு வந்தால் உலகின் முக்கிய எரிபொருள் வழங்கும் நாடாக இந்தியா மாறும், குறிப்பாகத் தென்மாநிலங்கள் திகழும். ‘மேட் இன் இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ என ஓயாமல் கூச்சலிடும் மோடியாளர்களுக்குத் தெரியாதா? மகாபாரதக் காலத்திலேயே ஆகாய விமானம் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையை உலகுக்குச் சொன்ன அறிவியல் மேதைக்கு இவை எல்லாம் தெரியாமல் போனது எப்படி? எனவேதான், தமிழகத்தின் விளைநிலப் பகுதிகளி லேயே ஷேல் எரிவாயு திட்டம் அமைய இருப்பதால் நிலத்தடி நீர்வளமும் வேளாண்மையும் மக்களின்  வாழ்வாதாரமும் பாதுகாக்க நிரந்தரத் தடை தேவையாகஉள்ளது.

நிலச்சரிவு ஏற்படும்
ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மக்கள் பாதுகாப்பான குடிநீர் வசதி இன்றி உயிரிழந்து வருகின்றனர் என்று 2018ல் நிதி அயோக் அமைப்பு எச்சரித்தது.இறுதியாக மேலும் ஒரு அபாயத்தை தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் எஸ்.ஜனகராஜன் குறிப்பிட்டுள்ளார். நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்காகவோ பாறையை உடைக்கும்போது அல்லது குடையும் போது அந்த பாறை யோடு இணைந்த உறுதியான மண் பிணைப்பு நெகிழ்ந்து விடும். இது மழைக்காலத்தில் நிலச்சரிவை ஏற்படுத்தும்.  நிலத் தடியில் இருந்து மீத்தேன் எடுக்கும்போது மீத்தேனுடன் நிலக்கரி, பாறைகள், தண்ணீர் ஆகியவற்றை வெளியேற்ற வேண்டும். அவ்வாறு செய்யும்போது நிலத்தின் உட்பகுதி யில் வெற்றிடம் ஏற்படும். புவி வெப்பமயமாதலால் கடல் மட்டம் உயர்ந்து சென்னை நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதில் நாகை மாவட்டத்திற்குப் பெரும் ஆபத்து உள்ள நிலையில், அங்கு மீத்தேன் எடுத்தால் நிலத்தடியில் வெற்றிடம் ஏற்பட்டு நிலமட்டம் தாழ்ந்து போகும்.  அதனால் கடல்நீர் உட்புகும்.   எனவே இயற்கையின் சமநிலையை சீர்குலைக்கக் கூடாது எனக்கூறி உள்ளார். எனவே, மேற்கண்ட அபாயத்தில் இருந்து டெல்டாவின் கடல்வளம் நிலவளம் நீர்வளம் காக்கக் கூடிடுவோம்!  குரல் கொடுப்போம்!  நிரந்தரமாய் திட்டம் நிறுத்தப்படும்வரை போராடுவோம்!

கட்டுரையாளர்:முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர், நாகப்பட்டினம்
 

;