tamilnadu

img

வள்ளியூர் அருகே எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி விபத்து

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே 18 டன் எரிவாயு ஏற்றிவந்த டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதால், விபத்து நடந்த இடத்திலிருந்து 2கி மீட்டருக்கு பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குமரி-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை கொச்சியில் உள்ள எரிவாயு சுத்திகரிப்பு ஆலையிலிருந்து சுமார் 18 டன் எடையுள்ள டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.  அப்போது வள்ளியூர் அருகே டேங்கர் லாரி வந்துகொண்டிருந்தபோது நம்பியாற்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  

தற்போது வரை அந்த எரிவாயு சிலிண்டரிலிருந்து எந்த கசிவும் ஏற்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விபத்து நடந்த பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.  

இதையடுத்து இந்த டேங்கர் லாரியில் உள்ள எரிவாயுவை வேறு ஒரு வாகனத்திற்கு மாற்றியபிறகு தான் இதன் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.