tamilnadu

img

‘வயிற்றில் பாலால்  அடித்த எடப்பாடி அரசு’

நெல்லை:
பாலினால் மக்கள் வயிற்றில் அடித்துள்ளது அதிமுக அரசு. பால் உற்பத்தியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தவே பால் விலையைத் தமிழக அரசு உயர்த்தியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 248 ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 20 அன்று நெல்லை மாவட்டம் சமாதானபுரத்தில் உள்ள ஒண்டிவீரன் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் மூன்றாவது முறையாகப் பால் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. வயிற்றில் பால்வார்ப்பார்கள் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த பாலினால் மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேறு வழி யில்லாமல் பால் விலையை உயர்த்தியதாகச் சொல்கிறார். கொள்முதலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சிதான் இது. பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் வளத்தைபொறுத்தவரை அதிக லாபத்தில் இயங்கிக் கொண்டிருப்ப தாகப் பெருமையுடன் பேசுகிறார். ஆனால் முதல்வர் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறார். இவர் களுக்கு இடையே முரண்பாடு இருக்கிறது” என்று கூறினார்.

;