tamilnadu

சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள் கேரள அரசைப்போல் நடவடிக்கை எடுக்க வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

உதகை, ஜூலை 4- வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்ற தொழிலாளிகள் மீண்டும்  சொந்த ஊருக்கு வருவதற்கு இ-பாஸ் கிடைக்கா மல் தவித்து வருகின்றனர். எனவே, அவர் களை கேரள அரசைப்போல் நடவடிக்கை மேற்கொள்ள வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் நீலகிரி மாவட்டச் செயலா ளர் சி.மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது, நீலகிரி மாவட் டத்தில் பெரிய தொழிற்சாலைகளோ, தொழில் வாய்ப்புகளோ இல்லை.படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் இங்குள்ள இளைஞர்கள் அண்டை  மாவட்டங்களுக் கும், பிற மாநிலங்களுக்கும் வேலைக்காக செல்கின்றனர்.

அங்கு நிலவும் பணிச்சுமை மற்றும் பயணநேரம், போக்குவரத்து கட்ட ணம் போன்ற காரணத்தினால் மாதத்திற்கு ஒரு முறை அல்லது பண்டிகைக் காலங்களில் மட்டுமே தங்கள் வீடுகளுக்கு வந்து செல் வர். இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் மத்திய அரசு திடீரென ஊர டங்கு அறிவித்தது. இதனால் தொழில் கள் முடங்கி, தொழிலாளர்கள் வேலை இழந்தும், வருமானம் இல்லாமலும் தவித்து வருகின்றனர். பொதுப் போக்குவரத்தும் முடங்கியது. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட் டது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல இ-பாஸ் கேட்டு இணையதளம் மூலம் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், இ-பாஸ் தொடர்ந்து ரத்தாகிக் கொண்டே வருகிறது.  

இதுகுறித்து தகவல் கேட் டால் பதில் கூற எந்த அதிகாரிகளும் தயா ராக இல்லை. தற்போது இவர்கள் கையில் இருக்கும் பணமும் தீர்ந்து விட்டதால் உணவுக்கு வேறு வழியின்றி, தங்கியிருக்கும் இடத்தில் இருந்து வெளியேற வேண்டிய  கட்டாயத் தில் உள்ளனர். இ-பாஸ் கிடைக்காமல் இருப்பதால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல்  இது போல் வெளி மாநிலங்க ளிலும், வெளி மாவட்டங்களிலும் இருந்து சொந்த ஊருக்கு வர முடியாமல் ஏராளமான மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் வெளி நாடு மற்றும் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை  சொந்த ஊருக் குத் திரும்பிட நடவடிக்கை எடுத்து வரும் கேரள அரசைப்போல தமிழக அரசும் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

;