tamilnadu

உதகை – கோவை பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

உதகை, ஜூன் 6- உதகைக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வரத்தொடங்கியதால் உதகை - கோவை இடையிலான பேருந்து போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த இரு மாதங்களாக பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், அதில் பல தளர்வுகள் அளிக்கப் பட்டன. குறிப்பாக, தமிழகம் 8 மண்டலங் களாக பிரிக்கப்பட்டு 50 சதவிகித பேருந்து கள் இயக்கப்பட்டன. அதில், கோவை  மண்டலத்தில் உதகைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்த பேருந்து களில், பயணிகள் என்ற பெயரில் பல்வேறு  காரணங்களை கூறி சுற்றுலா பயணிகள் உதகைக்கு அதிகளவு வரத் தொடங்கியுள்ள னர். இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து கழகத்தினர் கோவை - உதகை இடை யிலான பேருந்து போக்குவரத்தை சனிக் கிழமை (ஜூன் 6 ஆம் தேதி) முதல் ரத்து செய் தனர். தொழிலாளர்களை மட்டும் ஏற்றி  வருவதற்காக தினமும் காலை மேட்டுப் பாளையத்தில் இருந்து உதகைக்கு ஏழு பேருந்துகளும், மாலை உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 3 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.