tamilnadu

நடைப்பாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

நீலகிரி, அக். 28- நடைப்பாதையை சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதத் திற்கு முன்பு பெய்த கனமழையால்  பல் வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்தும், ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு உயிரி ழப்புகளும் ஏற்பட்டது. அப்போது உதகை நகராட்சிக்கு உட்பட்ட  சென்மேரிஸ் பகுதி யில் உள்ள சில வீடுகளிலும், நடைபாதை யிலும் திடீரென விரிசல் ஏற்பட்டது. இத னால் பாதிக்கப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த  மக்கள் நடைப்பாதையை சீரமைக்க வலியு றுத்தி அனைவரிடமும் கையெழுத்து பெற்று  நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்ன சென்ட் திவ்யாவை சந்தித்து மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரி களை அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.  இந்நிலையில், மூன்று மாதங்கள் கடந்து விட்டது. ஆனால் இப்பகுதியில் ஆய்வு செய்திட எந்த அதிகாரியும் இதுவரை வர வில்லை. இந்நிலையில் கடந்த வாரம்  பெய்த கனமழையின் காரணமாக மகேஷ் என்பவரது வீட்டின் முன்பாக நடைபாதை முற்றிலும் சேதமடைந்து 5அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது.  இதனால் நடைபாதையை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் என அனை வரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரு கின்றனர். மேலும், இந்த பாதையில் பாதாளச் சாக்கடை உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பொது மக்க ளின் நலன் கருதி உடனடியாக நடை பாதையை சீரமைத்தும், தடுப்பு சுவர் அமைத்து நிலச்சரிவு அபாயத்திலிருந்து  பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.