அய்யம்பேட்டை, ஜன.20- விபத்துகளை ஏற்படுத்து கின்ற கணபதி அக்ரஹாரம் - பாலக்கரை சந்திப்பு சாலை யை உடனே சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் - திருவை யாறு நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் உள் ளது. அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் செல் கின்ற சாலை சுமார் 2 கி. மீட்டர் தூரம் உடையது. பல மாதங்களுக்கு முன்பு கண பதி அக்ரகாரம் பாலக்கரை சந்திப்பு பகுதியில் உள்ள வாய்க்காலில் பாலம் கட்டப் பட்டது. பின்னர் சாலை எதுவும் அமைக்கப்படாமல் அப்ப டியே உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சாலையை உடனே சீர மைக்க வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.