tamilnadu

img

தையல் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திடுக தையல் தொழிலாளர்கள் ஆவேசம்

உதகை, ஜூலை 21-   கொரோனா நிவாரண நிதியாக ரூ.7 ஆயிரத்து 500  வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தையல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.  

நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.7 ஆயிரத்து 500  வழங்க வேண்டும். தையல் நலவாரியத்தில் 10 மாதமாக வழங் கப்படாத ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும். தையல் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி தையல் தொழிலாளர்கள் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, எருமாடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிஐ டியு மாவட்டப் பொருளாளர் ஏ.நவீன் சந்திரன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் எஸ்.ராஜரத்தினம், ரமேஷ், கே.மகேஷ், தையல் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாபுட்டி, உதகை இடைக்குழு தலை வர் யாஸ்மீன், செயலாளர் யமுனா தேவி, கோத்தகிரி இடைகமிட்டி பொருளாளர் சுதா, துணைத் தலை வர் ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

இதேபோல், திருப்பூர் மாவட்டத் தில் ஐந்திற்கு மேற்பட்ட இடங்க ளில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் குரு சாமி, மாவட்ட செயலாளர் சி.மூர்த்தி நிர்வாகிகள் ஒய்.அன்பு, வேல்முரு கன், கணேசன், அங்கப்பன், பிச்சை, தண்டபாணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

;