tamilnadu

நீலகிரியில் பேப்பர் போட் என்ற குளிர்பானம் விற்பனைக்கு தடை

நீலகிரி, ஜூன் 10- நீலகிரி மாவட்டத்தில் அனைத்து விற்பனை நிலையங்களிலும் பேப்பர் போட் (PAPER BOAT) என்ற நிறுவனத்தின் குளிர்பானங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா தடை விதித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ள தாவது, நீலகிரி மாவட்டத்தில் அனைத்து விற்பனை நிலையங்களிலும் பேப்பர் போட் என்ற நிறுவனத் தின் குளிர்பானங்கள் சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகின்றன. அந்த பாக்கெட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறமும் தடை செய்யப் பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக சுற்றுச் சூழல் துறையின் மூலமாக ஆய்வு மேற்கொண்டு கண்டறி யப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் குளிர்பானங்க ளும் மற்றும் இதர நிறுவனத்தின் மூலம் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களும், நீல கிரி மாவட்டத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் விற் பனை செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தடை விதிக்கப்படுகிறது. எனவே, அனைத்து வணிக நிறுவனங்கள், விற்ப னையாளர்கள் மற்றும் வியாபார சங்கங்கள் ஆகி யோர் மேற்கண்ட குளிர்பானங்களை நீலகிரி மாவட் டத்தில் விற்பனை செய்ய கூடாது. மீறி விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகத் திற்கு ஒத்துழைப்பு நல்குமாறும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கேட்டுக்கொண்டுள் ளார்.

;