உதகை, செப். 2 - நீலகிரி மாவட்டத்திற்கான இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நீல கிரி மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது: தமிழக அரசு மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை ஏற்படுத்தியதுடன் இ பாஸ் முறையையும் ரத்து செய்தது. ஆனால், நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் இ பாஸ் நடைமுறை தொடரும் என்று மாவட்ட ஆட் சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா அறி வித்துள்ளார். இதனால் உள்ளூர் மக்கள் ஒவ்வொரு முறையும் இ பாஸ் பெற்றுத்தான் சொந்த ஊருக்கு வர வேண்டும் என்பது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும். மேலும், மருத்துவ உயர் சிகிச்சைகள், பள்ளி மற்றும் கல்லூரி, தொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கோவை, திருப் பூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வர வேண் டிய நிலை உள்ளது. எனவே, மற்ற மாவட்டங்களில் அமுல் படுத்தியது போலவே நீலகிரியிலும் இ பாஸ் நடைமுறை ரத்து செய்ய வேண்டும். சுற்று லாவாசிகளின் வருகையை கட்டுபடுத்த, மாவட்ட மக்களுக்கு ஒரு அடையாள அட் டையை காண்பித்தால் போதுமானது என்கிற நடைமுறையை அமலாக்க மாவட்ட நிர்வாகமும், அரசும் முன்வர வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.