tamilnadu

img

அக்.10 முதல் உதகை-குன்னூர் மலை ரயில் இயக்கம்...

நீலகிரி:
நீலகிரி மாவட்டம் உதகை-குன்னூர் இடையே மலை ரயில் சேவை அக்டோபர்  10 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட கூடுதல் கோட்ட மேலாளர் அ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் முதற்கட்டமாக உதகை-குன்னூர் இடையே மலை ரயில் இயக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த 1 ஆம் தேதி கடிதம் எழுதினார்.இந்நிலையில், உதகை-குன்னூர் இடையே மலை ரயிலை இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 7.45 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்படும் மலை ரயில் 9.05 மணிக்கு உதகையை வந்தடையும். காலை 9.15 மணிக்கு உதகையிலிருந்து புறப்பட்டு காலை 10.25 மணிக்கு குன்னூர் சென்றடையும்.இதே போல பகல் 12.35 மணிக்கு குன்னூரிலிருந்து புறப்படும்மலை ரயில் மதியம் 1.50 மணிக்கு உதகையை வந்து சேரும். பின்னர் மதியம்2 மணிக்கு உதகையிலிருந்து புறப்பட்டு மதியம் 3.15 மணிக்கு குன்னூரைசென்றடையும். இதற்கான ஏற்பாடுகள் மற்றும் முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட கூடுதல் கோட்ட மேலாளர் அ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.